மின் உற்பத்தி இரண்டு மடங்கு உயர்வு: பியூஷ் கோயல் தகவல்

By பிடிஐ

மின் உற்பத்தி அளவு இரண்டு மடங்காக அதிகரித்து 9.5 சதவீ தமாக உள்ளது. இந்திய அளவில் 2016 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித் துள்ளது. 2004 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்த அளவைவிட 5.65 சதவீதம் அதிகரித்து 2016 ஆம் ஆண்டில் 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மின் உற்பத்தி அளவு புள்ளி விவரங்கள்படி 2004 ஆம் ஆண்டுக் கும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடையில் 5.65 சதவீதம் அதிகரித் துள்ளது. 2012-14 ஆண்டுக்கு இடையில் மின் உற்பத்தி 5.02 சதவீதமாக இருந்தது. 2014-16 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 7.03 சதவீதமாக இருந்த மின் உற்பத்தி அளவு 2016 ஆண்டில் தற்போதைய நிலவரப்படி 9.5 சதவீதமாக உள்ளது என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சமூக வலைதளமான டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

87 சதவீத மின் பற்றாக்குறையை கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைத்துள்ளோம் என்றும். முன்னதாக 110 மில்லியன் யூனிட்டு களாக இருந்த மின் பற்றாக் குறையை தற்போது 14 மில்லியன் யூனிட்டுகளாக குறைத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார தேவையை கண்காணித்து மத்திய அரசுக்கு புள்ளிவிவரங்களை அளிக்கும் வித்யத் பிரவா புள்ளிவிவரங்கள் படி 2014, ஜூலை மாதத்தில் 110 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின் தேவை 2016 ஜூலை மாத நிலவரப்படி 14 மில்லியன் யூனிட்டுகளாக குறைந்துள்ளது. 2015 ஜூலை மாதத்தில் இந்த அளவு 62 மில்லியன் யூனிட்டுகளாக இருந்துள்ளது.

1 யூனிட் மின்சாரத்தின் விலை 2 ரூபாய்க்கும் குறைவான விலையில்கூட கிடைக்கிறது என்றும் கோயல் டிவிட் செய்துள்ளார். மேலும் நாடு முழுவது மின் விநி யோகத்தில் நெரிசல் இல்லாத நிலையை உருவாக்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஒரே தேசம், ஒரே கிரிட், ஒரே விலை என்கிற நிலையை நோக்கி நாடு முன்னேறும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

புள்ளிவிவரங்கள்படி நாடு முழுவதும் பெருவாரியான மாநிலங் களில் ஒரு யூனிட் மின்சாரம் விலை 2.31 ரூபாய்க்கு கிடைக்கும் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. 3,961 மெகாவாட் மிகை மின்சாரம் மாநிலங்கள் தேவைக்கேற்ப உள்ளதாகவும் குறிப்புகளிலிருந்து தெரிய வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்