தோனியைக் கவர்ந்த மாருதி சுஸுகி ஆல்டோ!- அக்டோபரில் விற்பனைக்கு வருகிறது

By பிடிஐ

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் எம்எஸ் தோனியைக் கவர்ந்த ஆல்டோ சிறப்பு எடிஷன் கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே10 ஆகியன எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்துடன் இணைந்து இந்த சிறப்பு எடிஷன் கார்களை தயாரித்து அளிக்க உள்ளது. இந்தத் திரைப்படம் எம்எஸ் தோனியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாகும்.

இந்த ஸ்பெஷல் எடிஷன் கார்கள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மாருதி சுஸுகி விற்பனையகத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்பிரிவு செயல் இயக்குநர் ஆர்.எஸ். கல்சி தெரிவித்துள்ளார்.

தோனி மற்றும் கல்சி ஆகியோர் இந்த ஸ்பெஷல் எடிஷன் கார்களான ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே10 ஆகியவற்றை அறிமுகம் செய்தனர்.

இந்த சிறப்பு எடிஷன் கார்களில் தோனியின் கையெழுத்து இடம்பெறும். உயர் தரத்திலான `மியூஸிக் சிஸ்டம்’, `ரிவர்ஸ் பார்கிங் சென்சார்’ உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

15 லட்சம் கார்கள் ஏற்றுமதி

மாருதி சுஸுகி இதுவரை மொத்தமாக 15 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பலெனோ கார், முதன்முதலில் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காராகும். 1987-88-ம் ஆண்டுகளில் ஏற்றுமதி தொடங் கப்பட்டது. குறைந்த எண்ணிக்கை யிலான கார்கள் ஹங்கேரிக்கு ஏற்று மதி செய்யப்பட்டன. அதன் பிறகு ஏற்றுமதி உயர தொடங்கியது.

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, ஸ்விப்ட், செலிரியோ, பலெனோ மற்றும் சியாஸ் ஆகிய கார்கள் அதிகம் ஏற்றுமதியானவை ஆகும். இந்த கார்கள் இலங்கை, சிலி, பிலிப்பைன்ஸ், பெரு மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இலகுரக வாகனமான சூப்பர் கேரி தென் ஆப்ரிகா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. விரை வில் சார்க் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று மாருதி அறிவித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

38 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

46 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்