இந்தியா ராணுவத்துடன் ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

தனியார் வங்கிகளில் முதன்மை யானதாக திகழும் ஐசிஐசிஐ வங்கி இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) செய்துள்ளது.

ராணுவத்தில் பணி புரியும் அனை வருக்கும், ஓய்வூதியதாரர்களுக் கும் வங்கிச் சேவையை ஐசிஐசிஐ வங்கி அளிக்கும். ஐசிஐசிஐ வங்கியில் ராணுவ சம்பள கணக்கு என தனி கணக்கு செயல்படுத்தப்படும்.

இவர்களுக்கு ரூ. 1 கோடி வரை காப்பீடு வசதி (விமான விபத்துக்கு), ரூ. 30லட்சம் வரை விபத்து காப்பீடு வசதி அளிக்கப் படும். இது ராணுவத்தினர் அனைவருக்கும் பொருந்தும்.

அனைத்து நுகர்வோர் கடன் அதாவது வீட்டுக் கடன், தனி நபர் கடன், வாகன கடனுக்கான பரிசீலனைக் கட்டணம் கிடையாது. கேலன்ட்ரி விருது பெற்றவர் களுக்கு தனிநபர் கடனுக்கு வட்டி கிடையாது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்விக்கு ரூ. 1 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படும்.

ஏற்கெனவே ஐசிஐசிஐ வங்கி யில் கணக்கு வைத்துள்ள ராணு வத்தினருக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

தமிழகம்

58 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்