தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிறுவனங்கள் காணாமல் போகும்: அலிபாபா நிறுவனர் ஜாக் மா எச்சரிக்கை 

By செய்திப்பிரிவு

உற்பத்தி துறை நிறுவனங்கள் காலத்துக்கேற்ப புதிய தொழில் நுட்பங்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை யெனில் புதிய தொழில்நுட் பங்களை பயன்படுத்தும் உற்பத்தி நிறுவனங்கள் அழித்துவிடும் என்று அலிபாபா நிறுவனர் ஜாக் மா கூறியுள்ளார்.

அலிபாபா கிளவுட் கம்ப்யூட்டிங் மாநாட்டில் பேசிய அவர், அடுத்த முப்பது ஆண்டுகளில் வரப்போகும் தொழில்நுட்பங்கள் தான் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு விஷயங்களையும் தீர்மானிக்கப் போகிறது. அந்தப் புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப உற்பத்தி நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் காணாமல் போக வேண்டியதுதான் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இனிவரும் காலங்களில் நாம் சந்திக்கப் போகும் சவால்கள் இதற்கு முன் பார்த்திராத வகை யில், நாம் எதிர்பார்த்திராத வகை யில் இருக்கும். எனவே அதற்கு நாம் தயாராக வேண்டும். தொழில் நுட்பத்தில் பின் தங்கி இருக்கும் நிறுவனங்கள் காணாமல் போகும்.

அடுத்த முப்பது ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வர லாம். தொழில்நுட்பங்கள் மட்டும் மாறுவதில்லை. மாறாக மக்களின் மனநிலையும் சிந்தனைகளும் மாறு கின்றன. எனவே நிறுவனங்கள் எதிர்காலத்தில் நிலைத்து இருக்க வேண்டுமெனில் இணைய தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா என அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும். இவை மூன்றும் இணைந்ததுதான் முழு மையான எதிர்காலத்துக்கான தொழில்நுட்பமாக அமையும்.

இப்போதுள்ள இணைய தொழில்நுட்பம் நம்மை அடிப்படை யாகக் கொண்டு செயல்படுகிறது. வருங்கால தொழில்நுட்பம் பிறரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். எனவே, நுண்ணறி வும், டேட்டாவும் இணைந்தால்தான் முழுமையான தொழில்நுட்பம் சாத்தியமாகும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

8 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

3 mins ago

விளையாட்டு

24 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்