‘5 சதவீத பெண்களே உயர் பதவியை எட்டுகின்றனர்’

By செய்திப்பிரிவு

நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் 5 சதவீதம் பேர்தான் உயர் பதவிகளை வகிக்கின்றனர். சர்வதேச அளவில் 20 சதவீத அளவுக்கு பெண்கள் உயர் பதவிகளை எட்டியுள்ளனர். ஆனால் இந்தியாவில் இது 5 சதவீத அளவுக்கே உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாலியல் சார்ந்த இந்த ஆய்வை டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக வியல் மையம் நடத்தி, இந்தியாவில் நிறுவனங்களில் பாலின பேதம் காட்டப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்களின் பங்களிப்பு 2 சதவீதத்துக்கும் கீழாக உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் தொடக்க நிலையில் உள்ளோரின் எண்ணிக்கை 28 சதவீதமாகும். நடுத்தர பதவிகளில் 14.91 சதவீதம் பேர் உள்ளனர். உயர் பதவிகளில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9.32 சதவீதமாகும்.

தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. அதேபோல பாதியிலேயே வேலையை விட்டு நிற்கும் பெண்களின் சதவீதமும் இங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் பெண்கள் வேலைக்குச் சென்று பாதியிலேயே நிற்பது அதிகமாக உள்ளது. தொடக்க நிலை மற்றும் நடு நிலை பணிகளிலிருந்து பாதியிலேயே விலகும் பெண் களின் எண்ணிக்கை 48 சதவீதமாக உள்ளதாக அறிக்கை தெரிவிக் கிறது.

குழந்தையை பார்த்துக் கொள்வதற்காகவும், குடும்பத்தினரை கவனித்துக் கொள்வதற்காகவும் பெண்கள் பாதியிலேயே வேலை யை விட்டு விடுகின்றனர். முதியவர்களை கவனித்துக் கொள் வதற்காக வேலையை விடுவோரும் உண்டு. குடும்பத்தினரைக் காக்கும் பொறுப்பு தங்களுக்குத்தான் உண்டு என்ற எண்ணம் காரணமாக பெண்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை இரண்டாம் பட்சமாகத் தள்ளிவிடுகின்றனர். இதுவும் பெண்கள் பாதியி லேயே வேலையை விட்டு நின்று விடுவதற்குக் காரணமாகும்.

நிறுவனச் சட்டம் 2013-ன்படி பட்டியலிடப்பட்ட பொதுத்துறை அல்லது தனியார்துறை இயக்குநர் குழுவில் ஒரு பெண் இயக்கு நராவது இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால் இதை பெரும்பாலான நிறுவனங் கள் பின்பற்றுவதில்லை. இதை நிறைவேற்றுமாறு செபி இப்போது தான் கட்டாயப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 secs ago

க்ரைம்

11 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

35 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்