அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி அவகாசம்: நவம்பர் 2-ம் தேதி வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் இருந்து இறக் குமதி செய்யப்படும் பொருட்க ளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு செய்திருந் தது. இதற்கான அவகாசத்தை நவம்பர் 2-ம் தேதி வரை நீட்டித் துள்ளது.

அமெரிக்கப் பொருட்களுக்கான கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் முடிவு தற்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து பாதாம், முந்திரி மற்றும் பருப்புகள் உள் ளிட்ட 29 பொருட்களுக்கு கூடு தல் இறக்குமதி வரி விதிக்க ஜூன் மாதம் இந்தியா முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 4-ம் தேதியிலிருந்து வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் இதற்கு 45 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்போது நவம்பர் 2-ம் தேதியிலிருந்து வரி விதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை மத்திய வருவாய்துறை வெளியிட் டுள்ளது. இந்த ஆணை நவம்பர் 2-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா இறக்குமதி செய்யும் அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் இறக்கு மதி வரி விதிக்கப்படும் என கடந்த மார்ச் 9-ம்தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடு களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்தியா இந்த முடிவினை மேற் கொண்டது.

இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்க அதி காரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இருதரப்பு வர்த்தகத் திலும் உள்ள சிக்கல்களை தீர்க்க வும், குறுகிய கால மற்றும் நடுத்த கால வர்த்தகத்தினை அதிகரிக்க வும் முடிவு செய்துள்ளனர். மேலும் நீண்ட கால வர்த்தக வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அதி காரிகள் கூறினர்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கான கூடுதல் இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்தியா அமெரிக்காவை கேட்டுக் கொண் டுள்ளது. உள்நாட்டு தயாரிப்பாளர் களின் ஏற்றுமதி சந்தை பாதிக்கப் படாமலிருக்க இந்தியா இந்த கோரிக்கையை முன்வைத்துள் ளது.

1976-ம் ஆண்டு கொண்டுவரப் பட்ட ஜிஎஸ்பி ஒப்பந்தப்படி 3,500 இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தைக்கு வரி இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் மருத் துவக் கருவிகளை இந்தியாவில் வரி இல்லாமல் இறக்குமதி செய்ய அமெரிக்க நெருக்கடி அளித்து வருகிறது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்