பங்குச் சந்தை வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு 2 நாளில் ரூ. 4 லட்சம் கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

மும்பை பங்குச் சந்தை வர்த்த கத் தில் இரண்டு நாளில் ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக சரிந்து வருவதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீடு கள் கடந்த இரண்டு நாட்களில் 2 சதவீதம் சரிந்துள்ளது. இத னால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 4.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா சீனா வர்த்தக சர்ச்சை காரணமாக ஆசிய சந்தை களில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவும் பங்குச் சந்தை சரி வுக்கு முக்கிய காரணமாக அமைந் துள்ளது. ஆசிய சந்தைகளிலும் இதன் தாக்கம் இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களில் சென்செக்ஸ் தொடர்ச்சியாக 1,000 புள்ளிகள் சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சந்தை தொடர்ந்து சரிவான போக்கில் உள்ளது.

கடந்த மாதம் 28-ம் தேதி சந்தை 4 சதவீதம்வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு செப்டம்பர் 7-ம் தேதி நிலவரப்படி ரூ.157.40 லட்சம் கோடியாகும்.

ஆனால் நேற்றையை நிலவரப் படி ரூ.4.16 லட்சம் கோடி சரிந்து ரூ.153.24 லட்சம் கோடியாக உள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வர்த்தகத்தில் நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவி னைக் கண்டு ரூ. 159.35 லட்சம் கோடியாக இருந்தது.

தவிர ரூபாய் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த வட்டி விகி தத்தை ரிசர்வ் வங்கி விரைவில் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்கு களை விற்பனை செய்து வரு கின்றனர்.

ரூபாய் மதிப்பு சரிவு

இதன் காரணமாக பங்குச்சந்தை கள் கடும் சரிவை சந்தித்து வருவதாக சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 72.74 ஆக சரிந்தது. முன்னதாக டாலருக்கு நிகரான வர்த்தகத்தில் ரூ.72.72 வரை இருந்தது.

முந்தைய நாள் வர்த்தகத்தை விட நேற்று 27 பைசா சரிந் தது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 13 சதவீதம் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவின் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

52 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்