கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார் விற்பனை கடும் சரிவு

By செய்திப்பிரிவு

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார் விற்பனை கடுமை யான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த மே மாதத்தில் விற்பனை 20% சரிந்துள்ளது.

சில்லரை விற்பனையில் ஏற் பட்ட மந்த நிலை காரணமாக விற் பனை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 7 மாதங்களாக கார் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. மே மாத விற்பனை 2,39,347 ஆகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனையான கார் களின் எண்ணிக்கை 3,01,238 ஆகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தவிர்த்து பிற மாதங்களில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு கார் விற்பனை சந்தித்த அளவுக்கு கடந்த மே மாதத்தில் சரிவு கண்டுள் ளது. 2001-ம் ஆண்டு விற்பனை 21.91 % சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன விற்பனை, வர்த்தக வாகன விற்பனை ஆகி யனவும் மே மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளன.

மே மாதத்தில் உள்நாட்டில் கார் விற்பனை 26.03% சரிந்தது. மொத் தம் 1,47,546 கார்கள் விற்பனை யானது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனையானது 1,99,479 ஆகும். இரு சக்கர வாகன விற்பனை 6.73 சதவீதம் சரிந்துள் ளது. மொத்தம் 17,26,206 வாகனங் கள் விற்பனையாயின. முந்தைய ஆண்டு 18,50,698 வாகனங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக் கது. வர்த்தக வாகனங்கள் விற் பனை 10.02% சரிந்து 68,847 வாகனங்கள் மட்டுமே விற்பனை யானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்