பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பாஸ்மதி அல்லாத மற்ற அரிசி ரகங்களின் ஏற்றுமதி ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. 70.2 லட்சம் டன் அளவுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசம், இலங்கை மற்றும் பெனின் நாடுகள் வாங்கும் அளவை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த ஏற்றுமதி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

நாட்டின் எருமை இறைச்சி ஏற்றுமதி ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 11.6 லட்சம் டன் அளவுக்கு எருமை இறைச்சி ஏற்றுமதி இந்த காலகட்டத்தில் நடந்துள்ளது. வியட்நாம், மலேசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அரிசி மற்றும் எருமை இறைச்சி ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. -ராய்ட்டர்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

23 mins ago

சினிமா

28 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்