சொந்த தொழிலில் 5 சதவீத இந்தியர்கள்: தன்னார்வ நிறுவன ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் ஆரம்ப கால தொழில் முனைவு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் 5 சதவீதம்பேர்தான் உண்மையில் சொந்த தொழிலை தொடங்குகின்றனர் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

உலகிலேயே தொழில் தொடங்குவோர் எண்ணிக்கையில் 5 சதவீதம் என்பது மிக மிகக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தொழிலை தொடங்கி பாதியில் கைவிடுவோர் விகிதம் 26.4 சதவீதமாகும். உலகிலேயே இதுவும் இந்தியாவில்தான் அதிகமாகும்.

18 வயது முதல் 64 வயதுடைய 3,400 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவில் இவ்விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் காந்திநகரை தலைமையிடமாகக் கொண்ட குளோபல் என்டர்பிரனெர்ஷிப் மானிட்டர் எனும் நிறுவனம் 2016-17-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆரம்ப கால தொழில் முனைவில் 11 சதவீதம் பேர் தொழில் தொடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 சதவீதம் பேர் தனியாகவோ அல்லது கூட்டு சேர்ந்தோ தொழில் தொடங்குகின்றனர். எஞ்சிய 7 சதவீதம் பேர் நிறுவனர்களாக தொழிலை தொடர்கின்றனர். இவர்கள் மூன்றரை ஆண்டுக்குள்ளாகவே தொழிலை மூடிவிடுவதாகஅறிக்கை தெரிவிக்கிறது. இறுதியில் 5 சதவீதம் பேர்தான் 42 மாதங்களுக்கும் மேலாக தொழிலைத் தொடர்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்