உற்பத்தித் துறை வளர்ச்சி கடும் சரிவு

By செய்திப்பிரிவு

நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சி 8 மாதங்களில் இல்லாத அளவாக ஏப்ரலில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. பொதுத் தேர்தல் காரணமாக உற்பத்தித் துறை வளர்ச்சி சரிந்துள்ளது.

நிகிகி இந்தியா உற்பத்தி கொள்முதல் நிர்வாக குறியீடு ஏப்ரல் மாதத்தில் 51.8 புள்ளியாக சரிந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 52.6 புள்ளியாக இருந்தது. 2018 ஆகஸ்ட் மாதத்திலிருந்து உற்பத்தித் துறை வளர்ச்சி சரிந்துவருகிறது. கடந்த 8 மாதங்களில் தற்போது கடுமையான சரிவை சந்தித்துள்ளது. புதிய தொழில்கள் வளர்ச்சி சுமாராக இருப்பது, பொதுத் தேர்தல் மற்றும் தொழில்துறைக்குச் சவாலான சூழல் போன்றவை இந்தச் சரிவுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இருப்பினும் தொடர்ந்து 21-வது மாதமாக உற்பத்தித் துறை வளர்ச்சி 50 புள்ளிகளுக்கு அதிகமாகவே இருப்பது சற்று ஆறுதல் தரும் விஷயமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

விளையாட்டு

38 mins ago

தமிழகம்

38 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

உலகம்

2 hours ago

மேலும்