மாருதி கார் விலை திடீர் உயர்வு

By செய்திப்பிரிவு

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி தனது கார்களின் விலை 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃபியட்டும், அம்பாசிடர் கார்களும் கோலோச்சி வந்த காலத்தில் இந்தியாவில் ஆலை அமைத்து கார் தயாரிப்பில் புதிய புரட்சிக்கு வித்திட்டது மாருதி சுஸுகி. ஜப்பானின் சுஸுகி கூட்டுறவுடன் மத்திய அரசு இணைந்து உருவாக்கிய இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகளாகிறது.

ஏறக்குறைய 35 ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் குறிப்பாக கார்களின் உபயோகத்தில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 10 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனையாகும் 10 கார்களில் 8 கார்கள் மாருதி பிராண்டாக இருக்கும் நிலையை உருவாக்கியது.

இந்த நிலையில் மாருதி நிறுவனம் கார் நிலையை இன்று உயர்த்தியுள்ளது. மாருதி அல்ட்டோ முதல் மாருதி பிரிமியம் கிராஸ்வோவர் வரை குறிப்பிட்ட கார்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நாணய மாற்று உள்ளிட்ட காரணங்களுக்காக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்