அரசின் வரையறைக்கு உட்பட்டதுதான் ஆர்பிஐ: முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட லாம் என்றாலும் அரசு வகுத்துள்ள சட்டதிட்டங்களுக்குட்பட்டு செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு தான் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் கருத்து தெரிவித்துள்ளார்.

77 வயதாகும் பிமல் ஜலான் 1997-ம் ஆண்டிலிருந்து 2003-ம் ஆண்டு வரை ஆர்பிஐ கவர்னராக இருந்தார். தற்போது ரிசர்வ் வங்கி யிடம் உள்ள உபரி நிதியை அரசுக்கு வழங்குவது தொடர்பாக பரிந் துரைக்க நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக உள்ளார்.

இக்குழுவின் முதலாவது கூட்டம் இந்த வார தொடக்கத்தில் நடைபெற்றது. மூன்று மாத காலத்திற்குள் இக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியைக் கொண்டு நிதிப் பற்றாக் குறையை சமாளிக்க அரசு திட்டமிட் டது. ஆனால் நிதி ஒதுக்க ஆர்பிஐ சம்மதிக்காததால் இரு தரப்புக்கும் மனக் கசப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஆர்பிஐ கவர்னரா யிருந்த உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி வகித்தபோதே பிமல் ஜலான் குழு ஏற்படுத்தப் பட்டது.

நிதிக்கொள்கை வகுப்பதில் ரிசர்வ் வங்கியானது அரசின் வழி காட்டுதலுக்கு ஏற்ப உருவாக்க வேண்டியது கட்டாயம் என்றார்.

சுதந்திரமாக செயல்படும் அமைப்புக்கும் அரசுக்கும் பல் வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படு வது சகஜம். இந்த விஷயத்தில் அரசு எதற்காக நிதியைக் கோரு கிறது என்பதை ரிசர்வ் வங்கி கவ னிக்க வேண்டும். அரசியல் சூழ லைத் தாண்டி எதார்த்த நிலையை யும் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்