விவசாயக் கடன் தள்ளுபடியால் சில பிரிவு விவசாயிகளுக்கு மட்டுமே பயன்: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் சில பிரிவு விவசாயிகள் மட்டுமே பய னடைகிறார்கள் என்று நிதி ஆயோக் உறுப்பினரும் வேளாண் கொள்கை நிபுணருமான ரமேஷ் சந்த் கூறியுள் ளார்.

இந்தியாவில் பரவலாக விவ சாயிகள் பல்வேறு நெருக்கடிகளுக் குள்ளாகி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, விளைபொருள் களுக்கு சரியான விலை இல்லா தது, இயற்கைப் பேரிடர்கள், கடன் சுமை என தொடர்ந்து பல் வேறு நெருக்கடிகள். இதனால், விவசாயிகள் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் கவனம் ஏற்படுத் தும் வகையில் போராட்டங்களைச் செய்துவருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில், விவ சாயக் கடன் தள்ளுபடி, பொருள் களுக்கு தகுந்த விலை, நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங் குதல் ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாக உள்ளன.

இந்நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி என்பது சில பிரிவு விவ சாயிகளுக்கு மட்டுமே பலன் தரு வதாக இருக்கிறது என்பதுதான் அதி லுள்ள மிகப்பெரிய பிரச்சினை என்று, 15 ஆண்டுகளாக வேளாண் கொள்கை வகுப்பாளராக இருக் கும் நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “பல மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளபடியால் 10-15 சதவீத விவசாயிகள் மட்டுமே பலனடைந் துள்ளார்கள். ஏனெனில், நிதிநிறு வனங்களில் கடன் பெற்றவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். மேலும், சுவாமிநாதன் ஆணையம் உருவாக்கிய அறிக்கையின்படி தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதார விலையை அதிகமாக உயர்த்துவது முடியாத காரியம். ஏனெனில், அப்படி விலையை உயர்த்தினால் நாட்டின் பெரும் பகுதி மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்படும். ஆனால், அரசு நியாயமான விலை கிடைக்கும் வகையில்தான் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துள் ளது. மேலும், வேளாண் துறை கடந்த இரண்டு வருடங்களில் சிறப்பாகவே இருந்துள்ளது” என் றார்.

வேளாண் துறையின் வளர்ச்சியோ, உற்பத்தியோ கடந்த பல வருடங்களில் பெரிய அளவில் மாற்றமில்லை. இங்குப் பிரச் சினையே உற்பத்தியைக் கையா ளும் விதத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை என்பது தான். சேமிப்பும், பதப்படுத்தலும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

35 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்