சோலார் கூரை அமைப்பதில் இந்தியா வரலாற்று சாதனை

By செய்திப்பிரிவு

இந்தியாவில் சோலார் கூரை அமைப்பதில் இந்த ஆண்டு 1538 மெகாவாட் என்ற வரலாற்று உச்ச அளவை எட்டியுள்ளது.

வளங்கள் பற்றாக்குறை, சுற்றுச் சூழல் சீர்கேடு உள்ளிட்ட காரணங் களால் தொடர்ந்து புதுப்பிக்கத் தக்க ஆற்றல் பயன்பாட்டில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அதில் முக்கியமானது சூரிய சக்தி மின்சாரம். இந்திய அரசு 40 கிகாவாட் வரை சூரிய சக்தியில் மின்சார உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது.

இந்நிலையில், சூரியசக்தியி லிருந்து மின்சாரம் எடுக்கும் சோலார் கூரை அமைப்பதில் இந்தியா இதுவரை இல்லாத அளவில் கடந்த செப்டம்பர் 30 வரை யிலான 12 மாத காலத்தில் 1538 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் இலக்கை அடைந்துள் ளது. இது முந்தைய ஆண்டைக் காண்டிலும் 75 சதவீதம் உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்திய சோலார் கூரை உற்பத்தி செய்யும் மின்சார அளவு 3,399 மெகா வாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் சோலார் பயன்பாடு அதிகரிக்கு மாயின், 2022ல் சோலார் மின் உற் பத்தி அளவு 15.3 கிகாவாட் அளவுக்கு உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித் துள்ள இலக்கில் 35 சதவீதமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

15 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்