சிறு, குறு கடன்களை வங்கி மூலம் அளிக்க பந்தன் முடிவு

By செய்திப்பிரிவு

புதிதாக வங்கி தொடங்குவதற்கு கொள்கை ரீதியில் பந்தன் நிதிச் சேவை நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதனால் இப்போது அளித்து வரும் சிறு, குறு கடன் வசதிகளை புதிதாக தொடங்க உள்ள வங்கி மூலம் அளிக்கப் போவதாக பந்தன் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.எஸ். கோஷ் தெரிவித்தார்.

பந்தன் நிறுவனத்தின் கடன் வசதியை இதுவரை பெற்றுவரும் வாடிக்கையாளர்கள் இனி வங்கி மூலம் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

வங்கி தொடங்குவதற்கு 18 மாத கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. அதற்குள் வங்கிகளைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விட்டதாக அவர் கூறினார்.

வங்கி தொடங்குவதற்கு குறைந்தபட்ச முதலீடு ரூ. 500 கோடி என ஆர்பிஐ வரம்பு நிர்ணயித்துள்ளது.

தங்கள் நிறுவனத்தின் முதலீடு ரூ. 1,100 கோடியாகும். எனவே வங்கி தொடங்குவதற்கு முதலீடு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று அவர் கூறினார்.

பந்தன் நிதிச் சேவை நிறுவனத்துக்கு மொத்தம் 2016 கிளைகள் உள்ளன. இவற்றில் 70 சதவீதம் கிராமப் பகுதிகளில் செயல்படுகிறது. இந்நிறுவனத்துக்கு 55 லட்சம் வாடிக்கையாளர்களும் 13 லட்சம் பணியாளர்களும் உள்ளனர்.

கொல்கத்தாவை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் நான்காவது வங்கியாக இந்நிறு வனம் இருக்கும்.

ஏற்கெனவே யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளுக்கு கொல்கத் தாவில்தான் தலைமையகம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

வாழ்வியல்

43 mins ago

உலகம்

41 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்