ஃபேஸ்புக் - கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தகவல் பரிமாற்ற விவகாரத்தில் ஆவணங்களை கைப்பற்றியது இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறு வனத்துக்கு பேஸ்புக் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத் தில், இது தொடர்பாக ஆவணங் களை இங்கிலாந்து அரசு கைப்பற்றி யுள்ளது. கேம்பிரிட்ஜ் அனா லிட்டிகா நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் தகவல்களை அளித்த விவகாரத் தில் இந்த ஆவணங்கள் முக்கிய மானவையாகும்.

இங்கிலாந்து நாடாளுமன்றத் தின் கலாச்சார மற்றும் ஊடக விவகார கமிட்டியின் தலைவரான டாமின்ஸ் கொலின்ஸ் இது தொடர் பாக கூறுகையில், இங்கிலாந் தினைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனா லிட்டிகா நிறுவனத்துக்கு ஃபேஸ் புக் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள் ளன. சிக்ஸ்4 த்ரீ என்கிற இந்த ஆவணம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்ட ஆவணங்களாகும். இந்த விவகாரத்தில் இங்கிலாந்து நிறுவனத்தின் நிறுவனர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்படியான சூழல் முன்னெப் போதும் இல்லாத நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகை யில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பதில்களை பெறுவதில் தோல்வியடைந்தோம். இப்போது கைப்பற்றப்பற்ற ஆவ ணங்களில் உள்ள தகவல்கள் மிக மிக முக்கியமானவை என நம்புகிறோம்.

ஃபேஸ்புக் அனாலிட்டிகா தக வல் பரிமாற்ற விவகாரம் நடை பெற்றுள்ளதற்கான தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளன. தகவல்களை அனாலிட்டிகா நிறு வனத்துக்கு அளிப்பது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு மேற் கொண்டுள்ளதும் இந்த ஆவணங் களில் உள்ளன. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்கிற்கு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இ-மெயில் அனுப்பியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆவணங் களின் அடிப்படையில்ஃ பேஸ்புக் நிறுவனத்தின் மீது சட்ட நட வடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆவணங்களை வெளியிட கலிபோர்னியா நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

இது குறித்து ஃபேஸ்புக் நிறு வனம் கூறுகையில், இங்கிலாந்து நாடாளுமன்ற குழுவின் ஆவணங் களின் மீது கலிபோர்னிய நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது என்று உறுதிசெய்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறு வனத்துக்கு பயனர்களின் தகவல் களை அளித்த விவகாரத்துக்கு பின்னர் எழுந்த சர்ச்சைகளால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து 10,000 கோடி டாலருக்கும் அதிகமான இழப் பினை ஃபேஸ்புக் சந்தித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துக்கு 8.7 கோடி பயனாளிகளின் தகவல்கள் அளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன. அதன்பின்னர் ரஷிய அதிபர் தேர்தலில் தவறான தகவல்களை அளித்து மக்களின் கவனத்தை திசை திருப்பியது என்கிற சர்ச்சையிலும் தற்போது சிக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்