தொழில் புரிவதற்கு எளிதான சூழல் நிலவும் நாடுகளில் 3 ஆண்டுகளில் இந்தியா 25 இடங்களுக்குள் முன்னேறும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

உலக நாடுகளில் தொழில் புரிவதற்கு உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் 25 இடங்களுக்குள் முன்னேறும் என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆண்டுதோறும் உலக வங்கி வெளியிடும் தொழில் புரிய ஏதுவான நாடுகள் பட்டியில் இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்தியா 50 இடங்களுக்குள் முன்னேறும் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த ஒருநாடும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் 23 இடங்கள் முன்னேறியிருக்க முடியாது. மூன்றுஆண்டுகளில் 65 இடங்கள் இந்தியா முன்னேறியுள்ளது என்ற அவர் 5 ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் இந்தியா முன்னேற வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு உலக வங்கிவெளியிட்ட பட்டியலில் இந்தியா100-வது இடத்தில் இருந்தது. அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் பொதுத்தேர்தலை உத்தேசித்து கடுமையாக எதிர்த்துவரும் சூழலில் தொழில் தொடங்கஉகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

விளையாட்டு

5 mins ago

இணைப்பிதழ்கள்

31 mins ago

தமிழகம்

41 mins ago

இணைப்பிதழ்கள்

58 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்