ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்

By செய்திப்பிரிவு

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத் தில் புதிய திருப்பமாக, டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட்(டிஆர்ஏஎல்) நிறுவனத்தின் 2016-17 ஆண்டறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விமானப் படையின் தேவைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அரசு முடி வெடுத்தது. இதற்காக பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென அரசு வலி யுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தம் 2016 செப்டம்பரில் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி. இந்த மதிப்பில் 50 சதவீதத்தை, அதாவது ரூ. 30 ஆயிரம் கோடியை, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டுமென இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

ஆனால், இந்த ரூ. 30 ஆயிரம் கோடியும் டிஆர்ஏஎல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர் மலா சீதாராமன் மறுத்தார். ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே டிஆர்ஏஎல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி னார். அதாவது ரூ. 3000 கோடி. பிரான்ஸ் டசால்ட் நிறுவனமும் இதை உறுதிபடுத்தியது.

ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6,600 கோடி முத லீடு பெறப்பட்டதாக அறிவித்தது. இது பத்து சதவீதத்தைவிட 2 மடங்கு. இந்த நிலையில் ரிலை யன்ஸ் குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டு பங்காக காட்டப்பட்டுள்ளது. ஆனால், 2017-18 நிதி ஆண்டுக் கான அறிக்கையில் இதுகுறித்த விவரங்கள் எதுவும் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

37 mins ago

வாழ்வியல்

28 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்