ஐடிபிஐ வங்கி தலைவராக ராகேஷ் சர்மா நியமனம்

By செய்திப்பிரிவு

ஐடிபிஐ வங்கி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மூத்த வங்கியாளர் ராகேஷ் சர்மாவை அரசு நியமித்துள்ளது. இவர் ஆறு மாதகாலத்துக்கு இந்தப் பொறுப்பில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கியில் பெரும்பான்மை பங்கு அரசு வசம் உள்ளது. ஐடிபிஐ வங்கி தொடர்ந்து நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் இது ரூ. 8,237.92 கோடி நிகர நஷ்டத்தை அடைந்துள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ. 5,158 கோடியாக இதன் நிகர நஷ்டம் இருந்தது.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஐடிபிஐ வங்கியின் 26 சதவீத பங்குகளை ரூ. 12 ஆயிரம் கோடிக்குப் பெற்றுக்கொள்வதாக எல்ஐசி அறிவித்தது. எனவே வங்கியின் பெரும்பான்மை பங்குகளை எல்ஐசி வசம் மாற்றுவதற்கான முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதற்காக தற்போது இதன் தலைவர் பதவியில் ராகேஷ் சர்மாவை நியமித்துள்ளது. ஆறு மாத காலத்துக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்