66% சொத்தை இழந்த சீனாவின் பணக்காரப் பெண்: ட்ரம்ப் நடத்தும் வர்த்தகப்போரால் வரலாறு காணாத நஷ்டம்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவுடனான வர்த்தப்போரினால் சீனாவின் பணக்கார பெண்மணி என்ற பெருமை பெற்றிருந்த சுஹு குவான்ஷின் 66 சதவீத சொத்தை இழந்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இது 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்க ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை உயர்த்தியது. இரண்டாவது முறையாக மீண்டும் சீன பொருட்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே உச்சபட்ச ‘வர்த்தப்போர்’ நடந்து வருகிறது.

அமெரிக்காவின் வரிவிதிப்பால் சீனாவின் இணையத் தொழில்நுட்பத் தயாரிப்புகள், மின்னணுப் பொருட்கள் பெரும் நெருக்டிக்கு ஆளாகியுள்ளன. அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா உள்ளிட்ட பலருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் சொத்து மதிப்பும் சரிவடைந்துள்ளது.

இந்தநிலையில் டச் ஸ்கிரீன் மற்றும் லென்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்குச்சந்தைகளில் கடுமையாக வீழ்ந்தது. இதனால் அந்நிறுவனத்தின் தலைவர் சுஹு குவான்ஷின் சொத்து மதிப்பு 66 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவில் இதுவரை அதிகமான சொத்து கொண்ட பெண்மணியாக குவான்ஷின் விளங்கி வந்தார்.

இந்திய ரூபாய் மதிப்பில் 67 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு சொத்து இருந்தது. இந்த நஷ்டத்தால் அவர் ஒரு சில மாதங்களிலேயே சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொந்து மதிப்பை இழந்துள்ளார். தற்போது அவரின் சொத்து மதிப்பு வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான லென்ஸ் டெக்னாலஜி பெரிய அளவில் பொருட்களை தயாரித்து வருகின்றன. அமெரிக்க விதித்த வரியால், ஏற்றுமதி முடங்கி பெரும் நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்தித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்