பாதுகாப்பு அமைச்சகம் மூலம் ரபேல் ஒப்பந்தம் கிடைக்கவில்லை: அனில் திருபாய் அம்பானி குழுமம் விளக்கம்

By செய்திப்பிரிவு

ரபேல் ஒப்பந்தம் பாதுகாப்பு துறை அமைச்சகம் மூலம் எங்களுக்கு கிடைக்கவில்லை என அனில் திருபாய் அம்பானி குழுமம் விளக்கம் அளித்திருக்கிறது. இந்த விஷயத்தை மேலும் பெரிதாக்க வேண்டும் என்பதற்காக தவறான தகவல் பரப்பப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் தலை வர் ராஜேஷ் திங்க்ரா கூறியிருப்ப தாவது:

ரபேல் ஒப்பந்தத்தை பொறுத்த வரை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துக்கும் மத் திய பாதுகாப்பு துறை அமைச்சகத் துக்கும் இடையே ஒப்பந்தம் உருவானது. 36 போர் விமானங் களை இந்த நிறுவனம் இந்தியா வுக்கு அளிக்கும். இந்த ஒப்பந்தத் தில் முக்கியமான விஷயம், ஒப்பந்தத்தின் 50 சதவீத தொகையை (ஆப்செட் விதிமுறை) பிரான்ஸ் நிறுவனம் இந்திய பாதுகாப்பு துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் இருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என ஒப்பந் தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்று வதற்காக டசால்ட் நிறுவனம், ரிலை யன்ஸ் டிபன்ஸை தேர்வு செய் தது. டசால்ட் நிறுவனம் எங்களைத் தேர்வு செய்ததற்கும், பாது காப்பு அமைச்சகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தொடர்பாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை.

இதில் ரிலையன்ஸ் நிறுவனத் துக்கு அனுபவம் இல்லை என்னும் விமர்சனமும் இருக் கிறது. இந்தியாவில் ஹெச்ஏஎல் நிறுவனத்தை தவிர எந்த நிறுவனத் துக்கும் போர் விமானங்களை தயாரிக்கும் அனுபவம் இல்லை. தவிர இந்தியாவில் எந்த விமானமும் தயாரிக்கப்பட மாட்டது. இவை பிரான்ஸில் தயாரிக்கப் பட்டு நேரடியாக இந்தியாவுக்கு அனுப்பப்படும். இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் எந்த ஒப்பந்தமும் நாங்கள் செய்து கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தம் கையெழுத் தான சமயத்தில் அனில் அம்பானி பிரான்ஸில் இருந்தார். அதனால் அவருக்கு சாதகமாக இந்த ஒப்பந் தம் கிடைத்தது என்று கூறுவதில் உண்மையில்லை. இந்தியாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஹெச்ஏஎல் நிறுவனத்தின் தலைவரும் அங்கு இருந்தார். வெளிநாட்டு நிறுவனம் உள்நாட்டு பங்குதாரரை தேர்வு செய்வதில் மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை. 2005-ம் ஆண்டு முதல் ஆப்செட் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 50-க் கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேறி இருக்கின்றன. வெளி நாட்டு நிறுவனம் நேரடியாக உள் நாட்டு பங்குதாரரை முடிவு செய்யும். மக்களை குழப்புவதற் காக, இந்த விவகாரம் பெரிது படுத்தப்படுகிறது.

டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக, இந்த ஆப்செட் திட்டத்தில் ரிலை யன்ஸ் ஈடுபடும். இந்த நிறுவனத்தில் டசாட்ல்ட் பங்கு 49 சதவீதமாக இருக்கிறது. எங்களைத் தவிர தால்ஸ், சாப்ரான் உள்ளிட்ட சில நிறுவனங்களிலும் டசால்ட் இதேபோன்ற ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. இந்த ஆப்செட் திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் மூலமாக ரூ.30,000 கோடி ஆதாயம் கிடைத்தது என்று கூறுவதை ஏற்க முடியாது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தா வதற்கு சில நாட்கள் முன்பு ரிலையன்ஸ் டிபென்ஸ் தொடங்கப்பட்டதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.

ஆனால் அதில் உண்மை யில்லை. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மூன்று நிறுவனங்களை நாங்கள் தொடங் கினோம். 2015-ம் ஆண்டு பிப்ரவரி யில் இதனை முறையாக பங்குச் சந்தை உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிவித்தோம். ஆனால் 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இந்த ஒப்பந் தம் கையெழுத்தாகிறது. இதற் கும், நாங்கள் நிறுவனம் தொடங்கிய தற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த விமானங்கள் 2019 ஆண்டு செப்டம்பர் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பருக்குள் இந்தியாவுக்கு வரும். அந்த சமயத்தில் எந்ததெந்த உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்னும் தகவலை வெளியிட்டால் போது மானது. அதனால் பாதுகாப்பு துறை அமைச்சருக்கு எங்கள் இருவரின் ஒப்பந்தம் குறித்து தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் திங்க்ரா கூறினார்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழுவினை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். தவிர முந்தைய அரசு பேச்சு வார்த்தை நடத்திய தொகையை விட மூன்று மடங்கு கூடுதல் தொகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஒரு தனிநபர் பயனடைவதற்காக மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை செய்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

3 mins ago

சினிமா

26 mins ago

சினிமா

33 mins ago

கல்வி

28 mins ago

இந்தியா

56 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

43 mins ago

தொழில்நுட்பம்

49 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்