வரலாற்றில் இல்லாத சரிவு: டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 69.12 ரூபாயாக சரிவடைந்தது.

கச்சா எண்ணெய் விலை சில நாட்களாக குறைந்ததால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கம் ஏற்பட்டது. அதுபோலவே அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று சரிவடைந்தது. தொடர்நது இன்றும் வீழ்ச்சி தொடர்ந்தது. இன்றை காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 12 காசுகளாக சரிவடைந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை 60.10 என்ற அளவில் தான் சரிவடைந்தது. இன்று அதைவிடவும் அதிகமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து வரலாற்றில் இல்லாத நிகழ்வாகும்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நடந்து வருவதால் சீன நாணயமான யுவான் மதிப்பு சரிவடைந்து வருகிறது. இதன் தாக்கத்தால் இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக சரிவடைந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் பங்குச்சந்தைகள் இன்று உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 71 புள்ளிகள் உயர்ந்து 36,422 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

வணிகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்