ஏற்றுமதியாளர்களுக்கான ஜிஎஸ்டியை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோகன்தாஸ் பாய் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.20,000 கோடியை வழங்குவதற்கு அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஎப்ஓ மோகன்தாஸ் பாய் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: அற்ப காரணங்களுக்காக ஏற்று மதியாளர்களுக்கு இந்த தொகை நிலுவையில் உள்ளது. இந்த மோசமான சேவை காரணமாக சந்தையில் ஒரு எதிர்மறை சூழல் நிலவுகிறது. இந்த சிக்கலை தீர்ப்பதற்கு அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வளர்ச்சியும் குறைந்திருக்கிறது.

தற்போதைய சூழலில் வங்கிகள் கடன் கொடுக்கத் தயாராக இல்லை. அதனால் பெரும்பா லான நிறுவனங்கள் போதுமான நிதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அரசாங்கம் வரியை திருப்பி கொடுக்காததால் ஏற்றுமதி நிறுவனங்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருக்கிறது.

வரி ஆணையத்திடம் இருக்கும் அக்கறையின்மை காரணமாக நிறுவனங்கள் சிரமப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என மோகன்தாஸ் பாய் கூறியிருக்கிறார். ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.14,000 கோடி மட்டுமே என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது. மேலும் இந்த தொகையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அமைச்சகம் விளக்கம் அளித் திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்