கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மூடப்பட்டாலும் ஃபேஸ்புக் தகவல் கசிவு குறித்த விசாரணை தொடரும்: இந்திய அரசு அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மூடப்பட்டாலும் அந்த நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் வழியாக மக்களின் விவரங்கள் கசிந்தது தொடர்பான இந்திய அரசின் விசாரணை தொடரும் என மூத்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த தகவல் பகுப்பாய்வு மற்றும் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 8.7 கோடி ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் தகவல்களை அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இரு நிறுவனங்களும் விளக்கம் அளிப்பதற்கான கடைசி நாள் மே-10 ஆகும்.

ஆன்லைன் வழியான விளம்பரங்களுக்காக இத்தகைய தகவல்களை பெறுவது இயல்பான ஒன்றுதான் என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தெரிவித்துள்ளது. மேலும் தனது நிறுவனத்தை மூடுவதாகவும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா கூறியுள்ளது. இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மூடப்பட்டாலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்