அரசு நிறுவன பங்குகளை விற்று ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு: ஜேட்லி அறிவிப்பு

By ஐஏஎன்எஸ்

அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் நிதி திரட்டும் இலக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ரூ.80 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.

அவர் கூறியதாவது:

கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் அரசு நிறுவனங்களை விற்பனை செய்து நிதி திரட்டும் இலக்கு ரூ.72 ஆயிரத்து 500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இலக்கை மத்திய அரசு அடைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதலால், வரும் 2018-19ம் நிதி ஆண்டு அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டும் இலக்கு 10 சதவீதம் உயர்த்தப்பட்டு, அதாவது கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைந்தால் அரசுக்கு ரூ.80000 கோடி நிதி கிடைக்கும்.

மேலும், அரசின் இரு காப்பீடு நிறுவனங்களை பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்