பட்ஜெட்: ஒருங்கிணைந்த பி.எட்., வகுப்பு, ரூ.1 லட்சம் கோடியில் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள்

By செய்திப்பிரிவு

ஆசிரியர் பயிற்சிக்கான ஒருங்கிணைந்த பி.எட் வகுப்புகள் தொடங்கப்படும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 1 லட்சம் கோடி ரூபாயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பிடித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழன்) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையி்ல் 20 லட்சம் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பிடெக் மாணவர்களில் 1000 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பிரதமரின் ஆராய்ச்சி நிதியுதவி வழங்கப்படும்.

* நாடுமுழுவதும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய 24 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்

* சிறந்த முறையில் நவீன கல்வி என்ற இலக்குடன் பள்ளி கல்வி தரம் உயர்த்தப்படும்.

* அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளிகளில் கட்டிடங்கள் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1 லட்சம் கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படும். உயர் கல்வி நிதி நிறுவனங்கள் மூலம் இதற்கான நிதி திரட்டப்படும்.

* ஆசிரியர் பயிற்சிக்கான ஒருங்கிணைந்த பிட் வகுப்புகள் தொடங்கப்படும்

* பள்ளிகளில் இனிமேல் கரும்பு பலகைக்கு பதில், டிஜிட்டல் பலகையாக மாறும் விதத்தில் டிஜிட்டல் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* 2022ம் ஆண்டிற்குள் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒவ்வாரு வட்டாரத்திலும் ஏகலைவா மாடல் முன்மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்படும்.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

21 mins ago

சினிமா

22 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்