முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

By பிடிஐ

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 2018-19ம் நிதி ஆண்டில் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர், "பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, 10.36 லட்சம் பேருக்கு, ரூ.4.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது. இதில் 76% கடன் பெண்களுக்கும், 50 சதவீதம் கடன் பழங்குடியினர், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை சிறு, குறு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

 

 

அந்த வகையில் 2018-19ம் நிதி ஆண்டில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நஷ்டத்தில் இருக்கும் சிறு குறு நிறுவனங்கள், வாராக்கடனில் இருக்கும் நிறுவனங்களை மீட்கும் நடவடிக்கையை அரசு படிப்படியாக எடுக்கும். அதற்கான அறிவிப்புகளை அரசு விரைவில் வெளியிடும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

11 mins ago

சினிமா

14 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

12 mins ago

சினிமா

30 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

24 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

38 mins ago

வலைஞர் பக்கம்

42 mins ago

சினிமா

47 mins ago

மேலும்