ஐந்து நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

டாடா டெலிசர்வீசஸ், டெலினார், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த 5 நிறு வனங்கள் வருமானத்தை குறைத்து காட்டிய விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் படி, டாடா டெலிசர்வீசஸ், டெலிநார், வீடியோகான் டெலிகாம், குவாட்ரண்ட் (வீடியோகான் குழும நிறுவனம்), ரிலையன்ஸ் ஜியோ ஆகிய ஐந்து நிறுவனங்கள் தங்களது வருமானத்தை குறைத்து காட்டியுள்ளது தெரியவந்தது. மொத்தம் 14,800 கோடி ரூபாய் வருமானம் என்றே இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஆய்வில் கிட்டத்தட்ட ரூ.2,578 கோடி வருமானத்தில் காட்டாமல் மறைக்கப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட வருமானம் தொடர்பாக இந்த 5 நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்ப்ப திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த நோட்டீஸ் ஜனவரி மாதத்துக்குள் அனுப்பப்படலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

க்ரைம்

59 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்