ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகங்களில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

 ஒற்றை பிராண்ட்  சில்லரை வர்த்தகத்தில்  100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எளிமையாக தொழில் செய்யவும், அந்நிய முதலீடு அதிகரிக்கவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, ஒற்றை பிராண்ட்  சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  ஒற்றை பிராண்டுகளில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்று 49 சதவீத அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு செய்ய நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இனிமேல் அரசின் அனுமதியின்றி, 100 சதவீத அளவிற்கும்  இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு செய்ய முடியும். 

இதுமட்டுமின்றி, ஏர் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசின் அனுமதியுடன், 49 சதவீத அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதலீடு செய்யும் நிறுவனங்களில் வெளிநாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே 49 சதவீதத்திற்கு அதிகமாக முதலீடு இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏர்லைன்ஸ் இந்தியா நிறுவனம், அரசு நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்ள்ளது.

இதுமட்டுமின்றி கட்டுமான மேம்பாட்டு நிறுவனங்களில் மத்திய அரசின் ஒப்புதலின்றி, 100 சதவீத அளவிற்கு, அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்