ஹெச்1பி விசா விதிமுறையில் மாற்றம்: அமெரிக்காவில் திறமைக்கு பற்றாக்குறை ஏற்படும்; அமெரிக்க சட்ட வல்லுநர்கள் கருத்து

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் ஹெச்1பி விசா விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் பட்சத்தில் அமெரிக்காவில் திறமைக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் சட்டவல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்கர்களை வேலைக்கு (Buy American, Hire American)எடுக்க வேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இதற்காக ஹெச்1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்வர முற்படுகிறார். தற்போது ஹெச்1பி விசாவி லிருந்து கிரீன் கார்டாக மாற்றுவதற்கான அனுமதியை ரத்து செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹெச்1பி விசா வழங்குவதற்கான விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட முன்மொழியப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு தற்போது எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

``ஹெச்1பி விசாவில் கட்டுப்பாடுகளை கொண்டுவருவது அந்த விசா வைத்துள்ளவர்களின் குடும்பத்தையே பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க சமூகத்தில் அறிவாளிகளுக்கு பஞ்சம் ஏற் படும். மேலும் முக்கிய நாடான இந்தியாவின் உறவையே பாதிக்கும் வகையில் அமையும்” என்று அமெரிக்க ஜனநாயக கட்சியைச் சேர்ந்த துல்சி கபார்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த கட்டுப்பாடுகளை அமல் படுத்தினால் 5 லட்சம் முதல் 7லட்சம் இந்தியர்கள் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் சிறிய தொழில் நிறுவன அதிபர்கள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடியவர்கள். அமெரிக்க பொருளாதாரம் மிக வலுவான நிலைக்கு செல்வதற்கு இவர்கள் மிகப் பெரும் பங்களிப்பை செய்துவருகிறார்கள். அறிவானவர்கள் அமெரிக்காவை விட்டுச் சென்றால் 21-ம் நூற்றாண்டில் நாம் சர்வதேசத்தோடு போட்டி போடமுடியாமல் இருக்கும் நிலை உருவாகும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியாமல் போகும் என்று தெரிவித்தார்.

இந்திய அமெரிக்கரான ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ``அமெரிக்காவில் உள்நாட்டவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி மற்றும் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். ஹெச்1பி விசாவில் கட்டுப்பாடுகளை கொண்டுவருவதை விட பல்வேறு நிறுவனங்களை அமெரிக்காவில் முதலீடு செய்யும் வகையில் செயல்பாடுகளை முன்னெடுக்கலாம். ஹெச்1பி விசா கட்டுப்பாடு பரிந்துரைகள் ஏற்கப்படாது என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

17 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்