மாருதி சுசூகி நிகர லாபம் 3% உயர்வு

By செய்திப்பிரிவு

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 2.96 சதவீதம் உயர்ந்து ரூ.1,799 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.1,747 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த வருமானம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.19,793 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.19,528 கோடியாக இருக்கிறது.

இந்த காலாண்டில் மொத்த வாகன விற்பனை 11.3 சதவீதம் உயர்ந்து 4,31,112 ஆக இருக்கிறது. இதில் உள்நாட்டு வாகன விற்பனை 4,00,586 ஆகவும், ஏற்றுமதி 30,526 ஆகவும் இருக்கிறது. அதிக வரி காரணமாக நிகர லாபம் குறைந்திருக்கிறது. ஆனால் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது 22.1 சதவீதம் உயர்ந்திருப்பதாக மாருதி சுசூகி தெரிவித்திருக்கிறது.

நேற்றைய வர்த்தகத்தில் 1.60 சதவீதம் சரிந்து 9,277 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்