மும்பை பங்குச்சந்தையில் 4-வது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் 34,565 புள்ளிகளை கடந்தது

By செய்திப்பிரிவு

பங்குச்சந்தைகள் நாளாவது நாளாக இன்றும் ஏற்றம் கண்டன. காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில்சென்செக்ஸ் 34,565 புள்ளிகளை கடந்தது.

நேரடி வரி வருவாய் உயர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. நான்காவது நாளாக உயர்வு இன்றும் தொடர்ந்து. காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 34,565 புள்ளிகளை கடந்தது. இது, இதுவரை இல்லாத அளவு ஏற்றமாகும். அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 10,655 புள்ளிகளை, காலை வர்த்தகத்தில் தொட்டது.

உடல்நலம், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டன. நிறுவனங்களை பொறுத்தவரை ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரீடு, ஐடிசி, எஸ்பிஐ, இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

முக்கிய நிறுவனங்களின் காலாண்டு வர்த்தக முடிவுகள் வெளியாகும் நிலையில், அது லாபம் ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி வருவதால், இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக பங்குசந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்