எல் அண்ட் டி-க்குரூ.3,355 கோடி ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.3,355 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்துள்ளது. நிறுவனத்தின் கட்டுமான தொழில் பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், நிறுவனத்தின் கட்டுமான தொழில் துணை நிறுவனமான எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்சன் ரூ.3,355 கோடிக்கு புதிய ஒப்பந்தம் பெற்றுள்ளதாக கூறி யுள்ளது.

இந்த ஒப்பந்தம் புதுடெல்லியில் இந்தியா - சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (IICC) அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துக்கான ஒப்பந்தமாகும்.

இதுதவிர ஐகேஇஏ நிறுவனத்துக்காக நவி மும்பையில் சில்லரை வர்த்தக மையம் கட்டுவதற்கான ஒப்பந்தத்திலும் எல் அண்ட் டி ஈடுபட்டுள்ளது. இந்த சில்லரை வர்த்தக மைய பணிகள் 2018-ம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர கொல்கத்தாவில் ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புக்கான `விவேக திருதா’ என்கிற மனிதவள மேம்பாட்டு மையத்தினை கட்டுவதற்கான ஒப்பந்தமும் பெற்றுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ.1,275 வரை வர்த்தகமானது. சந்தை முடிவில் ரூ.1,269 என்கிற அளவில் முடிந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

26 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்