பிக் பாஸ்கட்-டில் முதலீடு செய்ய அலிபாபா திட்டம்

By செய்திப்பிரிவு

பிக்பாஸ்கட் நிறுவனத்தில் 30 கோடி டாலரை முதலீடு செய்ய அலிபாபா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் முறையாக அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அலிபாபாவுடன் சேர்ந்து பேடிஎம் மால் நிறுவனமும் பிக்பாஸ்கட்டில் முதலீடு செய்யும் என தெரிகிறது. இந்த இணை ப்பு நடைபெறும் பட்சத்தில் இரு நிறுவனங்களும் பிக்பாஸ்கட்டில் 35 % முதல் 40 % பங்குகளை வைத்திருக்கும்.

அலிபாபாவின் இந்த முதலீடு காரணமாக இந்த துறையில் போட்டி மேலும் கடினமாகும். இது தொடர்பாக பிக்பாஸ்கட் மற்றும் அலிபாபா ஆகிய நிறுவனங்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. பிக் பாஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான அனுமதியை (போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின்) கடந்த நவம்பர் மாதம் அலிபாபா பெற்றுவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

55 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்