தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் பங்குச்சந்தை

By செய்திப்பிரிவு

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளி வர இருக்கின்றன. இந்த முடிவுகளை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

ஜியோஜித் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவுத் தலைவர் வினோத் நாயர் கூறும் போது, ``முதலீட்டாளர்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். முடிவுகளின் அடிப்படையில்தான் இந்த வார சந்தையின் வர்த்தகம் இருக்கும். கருத்து கணிப்புக்கு மாறாக (அதாவது பாஜக தோல்வியை தழுவும் பட்சத்தில்) தேர்தல் முடிவுகள் வரும் பட்சத்தில் சந்தை சரிவடைய வாய்ப்பு இருக்கிறது. இந்த சரிவு நடுத்தர கால அளவில் இருக்கும். தேர்தல் முடிவுகளை தவிர அமெரிக்க வரி சீர்த்திருத்தங்கள் மற்றும் சர்வதேச சந்தை சூழ்நிலைகளும் கவனிக்கப்பட்டு வருகின்றன’’ என கூறினார். மேலும் சந்தை உயர்வது மட்டுமல்லாமல் ரூபாய் மதிப்பும் உயர்வடையும் ஆனால் உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளின் போது இருந்த ஏற்றம் இருக்காது என கோடக் செக்யூரெட்டீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வந்தவுடன் சந்தையில் ஏற்றம் இருக்கலாம். ஆனால் அதன் பிறகு சந்தையில் சரிவு ஏற்படலாம். இந்த வாரம் மட்டுமே சந்தையில் அதிக வர்த்தகம் நடக்கும். அடுத்த வாரங்களில் சர்வதேச அளவில் விடுமுறை என்பதால் சந்தையை கவனிப்பது நல்லது என சாம்கோ செக்யூரெட்டீஸ் நிறுவனத்தின் ஜீமித் மோடி தெரிவித்தார். கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி 67.60 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்