ஒகினாவா பிரைஸ் பேட்டரி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

ஒகினாவா பிரைஸ் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் இரண்டாவது மாடல் ஸ்கூட்டர் இதுவாகும். டெல்லியில் இதன் விற்பனையக விலை ரூ. 59,889 ஆகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிட்ஜ் எனும் மாடலை இந்நிறுவனம் அறிமுகப்படுத் தியிருந்தது.

பிரைஸ் மாடல் ஸ்கூட்டரானது இந்நிறுவனத்தின் பிரீமியத் தயாரிப்பாகும். இதன் முன்புறத்தில் எல்இடி ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பின்பகுதியில் இன்டிகேட்டர் மிகச் சிறப்பான வடிவமைப்போடு உள்ளது. இதில் 1000 வாட் மோட்டார் உள்ளது. இது 2500 வாட் திறனை (3.35 பிஹெச்பி) வெளிப்படுத்தக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 175 கி.மீ. முதல் 200 கி.மீ.தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அடிப்படையில் கணக்கிட்டால் ஒரு கிலோ மீட்டர் பயணத்துக்கு ஆகும் செலவு 10 பைசாவாகும்.

இந்த ஸ்கூட்டர் 1940 மி.மீ. நீளமும் 745 மி.மீ. அகமும் கொண்டது. இதன் உயரம் 1,145 மி.மீ ஆகும். இதன் இருக்கை உயரம் 774 மி.மீ. ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீ. இதில் 12 அங்குல அகல சக்கரம் உள்ளது. இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் மற்றும் எலெக்ட்ரானிக் உதவியிலான பிரேக்கிங் வசதி கொண்டது. முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்பகுதியில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. இதனால் ஸ்திரமான, சவுகர்யமான பயணத்தை இந்த வாகனம் உறுதி செய்கிறது.

இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக சைடு ஸ்டாண்ட் உணர் கருவி, சாவி இன்றி இயக்கும் வசதி, ஸ்கூட்டரின் செயல்பாடுகளை அறியும் வசதி, திருடர்களிடமிருந்து வாகனத்தை காக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன. சீட்டின் உள்பகுதியில் 19.5 லிட்டர் இட வசதி உள்ளது. இது இரட்டை பேட்டரி வசதிகளோடு அறிமுகம் ஆகிறது. விஆர்எல்ஏ பேட்டரியை தேர்வு செய்யலாம். இது சார்ஜ் ஆக 6 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகும். விரைவாக சார்ஜ் ஆக விரும்புவோர் லித்தியம் அயன் பேட்டரி வாகனத்தைத் தேர்வு செய்யலாம். இது 2 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும்.

தற்போதைக்கு ஆசிட் பேட்டரியில் இயங்கும் வகையில் வாகனம் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் லித்தியம் அயன் பேட்டரி வாகனம் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அதிகமாக இருக்கும்.

முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.2 ஆயிரம் செலுத்தி பதிவு செய்யலாம். இம்மாத இறுதியி்ல் டெலிவரி செய்யப்படும். இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 106 விற்பனையகங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்