திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மீண்டும் தடை  

By ஆர்.தினேஷ் குமார்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையைப் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடை உத்தரவு, 19-வது மாதமாக, புரட்டாசி மாதப் பவுர்ணமியிலும் தொடர்கிறது.

இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், வரும் 20-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 5.20 மணியில் இருந்து 21-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 5.51 மணி வரை உள்ள பவுர்ணமி நாளில் அண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே, திருவண்ணாமலை மற்றும் வெளிமாவட்ட, மாநில பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு வரவேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்