பிரேசிலில் போலீஸார் துப்பாக்கிச் சூடு: போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 25 பேர் பலி

By செய்திப்பிரிவு

பிரேசிலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த கடத்தல் கும்பலின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸார் உட்பட 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரியோ டி ஜெனிரோவில் போலீஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அதிகம் பேர் பலியானது இந்த சம்பவத்தில்தான்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸாரால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான குழு கடத்தல் மற்றும் கொலைகளில் ஈடுபட்டதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பிரேசிலில் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்