கிணற்றில் விழுந்த சிறுத்தையைக் காப்பாற்றிய வனத்துறையினர்

By என்.கணேஷ்ராஜ்

குமுளி அருகே புலிகள் சரணாலயப்பகுதி அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் காப்பாற்றி வனப்பகுதிக்குள் விட்டனர்.

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே உள்ள வனப்பகுதி பெரியாறு புலிகள் சரணாலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஒரு கிமீ.தூரத்தில் 62வது மைல் எனும் இடம் உள்ளது.

இங்குள்ள எஸ்டேட் கிணற்றில் இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது. வெளியேற முடியாமல் பல மணிநேரம் பரிதவித்து கொண்டிருந்தது. இதன் சப்தம் கேட்ட தொழிலாளர்கள் தேக்கடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததால் சிறுத்தையை வெளியேற்ற முடியவில்லை. எனவே மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி கூண்டு மூலம் சிறுத்தையைப் பிடித்தனர். பின்பு பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்கு கொண்டு போய் விட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சுமார் 3 வயதுடைய இந்த சிறுத்தை சரணாலய வனத்திலிருந்து தவறி இப்பகுதிக்கு வந்துள்ளது தண்ணீர் குடிக்க செல்கையில் தவறிவிழுந்திருக்கலாம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

13 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்