நீளமான முடியுள்ள இளம்பெண்: கின்னஸில் இடம் பெற்ற நிலன்ஷியின் கனவு

By செய்திப்பிரிவு

குஜராத்தை சேர்ந்த நிலன்ஷி படேல் 190 செமீ நீளம் முடி வளர்த்து, உலகிலேயே அதிக நீளமான முடியுள்ள பதின்பருவப் பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

கற்பனைக் கதைகளில் வருவதுபோல உச்சி காலுக்கும் மேலான முடியுடன் காணப்படும் குஜராத்தைச் சேர்ந்த நிலன்ஷி படேல், தனது நீளமான முடிக்கு தனது அம்மா வீட்டில் தயாரிக்கும் எண்ணெய்தான் காரணம் என்கிறார்.

தனது முந்தைய உலக சாதனையான 170.5 செ.மீ. சாதனையை அவரே மீண்டும் முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றிருப்பது குறித்து நிலன்ஷி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “நான் எனது முடியை மிகவும் நேசிக்கிறேன். நான் எனது முடியை வெட்டுவதை எப்போதும் விரும்பவில்லை. நான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பது எனது அம்மாவின் கனவு.

நான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது புதிய சாதனை. தற்போது இந்த ஒட்டுமொத்த உலகத்திற்கும் என்னைத் தெரிய ஆரம்பித்திருக்கிறது” என்றார்.

சாஃப்ட்வேர் இன்ஜினீயராக விருப்பம் என்று தெரிவித்துள்ள 17 வயதான நிலன்ஷி, எதிர்காலத்தில் நீளமான முடியுள்ள இளம்பெண் என்ற சாதனையைப் புரிய வேண்டும் என்பது தனது கனவுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்