'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்தை சினிமா பேட்டையில் லார்டு எனப் புகழ்ந்து பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளா ஹர்பஜன் சிங்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒருமுறை கூட உங்கள் சிகரம் குறைந்ததேயில்லை. நீங்கள் தூக்கிப்போட்டுப் பிடிக்கும் சிகரெட் விழுந்ததேயில்லை. ஆறில் இருந்து அறுபது வரை, உங்கள் வசீகரத்தில் மயங்கிய நாங்கள் எழுந்ததேயில்லை.

சினிமா பேட்டை இன் லார்டு என்றுமே நீங்கள் தான் தலைவா.இனிய பிறந்தநாள் வாழ்ததுகள் @rajinikanth" என்று பதிவிட்டுள்ளார்.

பேட்டை திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்த் திரைப்படம். வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் அத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தைச் சுட்டிக்காட்டியே ஹர்பஜன் சினிமா பேட்டையின் லார்டு எனப் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து சொல்லும் ஹேஷ்டேகுகளை உருவாக்கியுள்ளனர். அது இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

#HBDThalaivarSuperstarRAJINI, #HBDSuperstarRajinikanth ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்