ட்வீட்டாம்லேட்: சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு பெருகும் ஆதரவு

By க.பத்மப்ரியா

அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது, மாட்டிறைச்சிக்கு தடை, இந்துத்துவ அமைப்புகளின் முரணான தலித் எதிர்ப்பு நடவடிக்கை என பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததாக சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் மாணவர் Ambedkar-Periyar Study Circle (APSC) என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்க கோரி மனிதவள மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைத்ததன் பேரில், ஐ.ஐ.டி நிர்வாகம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அம்பேக்தர், பெரியார் மற்றும் தலித் சிந்தனைகளை பரப்பிய மாணவர் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெயர் குறிப்பிடப்படாத நபரின் புகாரின் அடிப்படையில் ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவர் அமைப்புக்கு தடை விதித்திருப்பது கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

APSC அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் ட்விட்டரில் >IIT Madras என்பது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. ஐ.ஐ.டி-யின் மற்ற மாநிலப் பிரிவுகளில் உள்ள மாணவர்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தையும் மத்திய அரசையும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ட்விட்டரில் கொதித்தெழுந்த மாணவர் அமைப்பின் ஆதரவுக் குரல்களின் மூலம் ஒலித்த பலதரப்பட்ட கருத்துக்கள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில் இடம்பெறுகின்றன...

Markandey Katju ‏@mkatju - மோடியை விமர்சித்ததாக ஐஐடி சென்னையில் செயல்பட்ட மாணவர் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை 19(ஏ) சட்டப் பிரிவின்படி தவறாகும். அரசியலமைப்பு சட்டத்தை அரசு மீறுவதா?

Arbin Zacharias ‏@arbinhere - நமது நாட்டை ஆட்சி செய்வது ஹிட்லரா? பாசிச ஆரிய செயல்பாடுகள்தான் இங்கு திணிக்கப்படுகிறது. நரேந்திர மோடி அரசு மக்கள் விரோத போக்கை விமர்சித்த ஐஐடி மெட்ராஸ் மாணவர் குழுவை தடைசெய்தது கொடுமை.

புகழ் ‏@mekalapugazh - வாழ்க ஜனநாயகம்...

Sanjay Jha ‏@JhaSanjay - கருத்து சுதந்திரம். இதுதான் நரேந்திர மோடி ஸ்டைல். மோடியை விமர்சித்தால் தடை. பாசிசத்தின் முகம் இப்போது தெரிகிறதா?

Yudhishthir Chede ‏@onlyyudhs - மேலும் ஒரு இயக்கத்துக்கு தடை. மக்களின் விமர்சனக் குரலைக் கூட ஏற்க முடியாதவர்களுக்கு ஆட்சி எதற்காக?

Rishi Bagree - ஐஐடி-யில் அரசியல் தொடர்பான நடவடிக்கைகள் இருப்பதை நிர்வாகம் எப்போதுமே விரும்பியதில்லை.

AtheistClub ‏@Atheist_Club - ஐ.ஐ.டி சென்னையின் செயல் வெட்கக் கேடானது. இந்தியாவில் உயர்கல்வியின் கதி இதுதான்.

manjula narayan ‏@utterflea - ஆனால், மாணவர் அமைப்பு தடைக்கு சென்னை ஐஐடி வளாகத்தில் எந்த எதிர்ப்பு இல்லை. எல்லாம் மகத்தான அறிவுஜீவிகள்.

Nakul Shinde ‏@NakulShinde - இனிமேல், ஐஐடி மாணவர்கள் அனைவரும் டீனின் ஹேர் ஸ்டைலை ஃபாலோ செய்வார்கள். #StayStuned.

Vivek Tankha ‏@VTankha - மிஸ் ஸ்மிருதி இது மிகுவும் குழந்தைத்தனமாக உள்ளது. கொஞ்சம் அமைச்சராக செயல்படுங்கள்.

Fahim Faruqui ‏@fahimfaruqui - இந்திரா காந்தி வழியில் மோடியும் அவசர நிலையை ஏற்படுத்த வாய்ப்புண்டு

Ram Gopal ‏@ramgopaldass_77 - பிரதமர் / மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை விமர்சிப்பதெல்லாம் சரிதான். ஆனால் ஐஐடி-யில் இது போன்ற அமைப்புகளை அனுமதித்தால் மற்ற பிரிவினரிடையே தேவையற்ற இந்துத்துவ எதிர்ப்புப் போக்கு ஏற்பட்டுவிடும்.

ProudIndian Mehek ‏@MehekF - எலைட் கல்வி அமைப்புகளுக்குள் நுழைந்து பாசிசத்தை திணிப்பதை ஸ்மிருதி இரானி நிறுத்த வேண்டும்.

manjula narayan ‏@utterflea - இந்த அமைப்பு மோடியை விமர்சித்ததற்காக மட்டும் தடை செய்யப்படவில்லை. இடஒதுக்கீட்டை அமல்படுத்த தவறியதை சுட்டிக் காட்டியதற்காகவும் தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்