நெட்டிசன் நோட்ஸ்: கங்குலி பிறந்த நாள் - அன்பான, ஆக்ரோஷமான கேப்டன்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி  இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

மேதகு டசக்கு

 

தன்னம்பிக்கையின் மறு உருவம் கங்குலி!!

 

Dheena Shankar

 

வெள்ளைக்காரன் காந்தி'ய கூட மறந்துடுவான்

ஆனா #கங்குலி'ய மறக்கவே மாட்டான்  

 

இராவண ராசா

 

இந்திய அணியை உருவாக்கிய தலை சிறந்த கேப்டன் சவுரவ் கங்குலி பிறந்ததினம் இன்று நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே...

 

MÅĐ#ÜßĀŁÄÑ /ÊĹŠĄMÝ

 

கிரிக்கெட் மீதான வெறியையும், ஆக்ரோஷத்தையும் நம்மிடம் அதிகம் விதைத்தது 'கங்குலி' தான்... உணர்வுகளோடு கலந்த விளையாட்டாக கிரிக்கெட் மாறியது அவர் வருகைக்கு பின் தான் ..

 

Remcian Santhiagu

எனக்கு பிடித்த கங்குலி ஆட்டம்

 

இலங்கை கூட அடித்த 183

 

அதுவும் 100 ரன்னுக்கு பிறகு ருத்தரதாண்டவம் இதுவரை எந்த பிளேயரும் அடித்தது இல்லை

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாதா

 

ஆழ்வார்க்கடியான்

 

இன்றைக்கு வேண்டுமானால் ஆக்ரோஷம் காட்டலாம் விராட் 'கோலி', ஆனால் அதற்கு விதை போட்டவர் சவுரவ் கங்குலி

 

நர்சிம்

 

கங்குலியின் பெயருக்குப் பின்னால் வெற்றி எண்ணிக்கைகள் அதிகம் இல்லை என்போருக்கு, இன்றைய வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் பெயர், கங்குலி

 

90's kid சாமியார்

 

ஒரு கட்டத்தில் சூதாட்ட சர்ச்சையில் இந்திய அணி சிக்கி தவித்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த தருணத்தில்  

 

இந்திய அணிக்கு புது ரத்தத்தை பாய்ச்சி அணியை ஆக்ரோஷமாக வழிநடத்தி வெற்றிப்பாதைக்கு திருப்பிய அணித்தலைவன் 

 

Deepak Afc :-)

 

கங்குலி எறங்கி வந்து ஒரு ஷாட் வச்சாலே  க்ரவுண்டுக்கு வெளிய தான்  , போச்சு பாரு ராக்கெட்னு பசங்களுக்கு சொல்லி சந்தோஷப்படதெல்லாம் ஒரு காலம்  

 

HBD DADA

 

கங்குலி பண்ணதுலயே தரமான சம்பவம் ரெண்டு.

1. டெபுட்ல லார்ட்ஸ் செஞ்சுரி

2. தோனிய உள்ள கூட்டினு வந்தது

 

Mohankumar Shanmugam

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றின்  கர்வம் மட்டுமல்ல கிரீடமும் கங்குலி தான்

 

குழந்தை அருண் New

கங்குலி இஸ் எ வேர்ட்.

 

Dada இஸ் எமோஷன் 

 

 

Satheesh

 

 

அன்பான, அமைதியான கேப்டனா நீங்க தோனியா தான் பார்த்திருக்கீங்க

 

ஆனா அன்பான, ஆக்ரோஷமான கேப்டன்னா அது தலைவன் #கங்குலி தான்

 

எவ்வளவு தான் நீங்க இப்ப கிரிக்கெட்ட நேசிச்சாலும்

 

கங்குலி காலத்து கேப்டன்சி மேட்ச பார்த்து ரசிச்சதெல்லாம் வரம்

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்