கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை அனைத்து திரையுலகங்களும் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜன.6) 50-வது பிறந்தநாள். அதையொட்டி இணையத்தின் வாழ்த்து தெரிவித்துவரும் இசை ரசிகர்களின் பதிவுத் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Sabitha Joseph
ஆஸ்கர் தமிழன், பொன்விழா நாயகன், உலகம் கொண்டாடும் இசைப் புதல்வன் ரஹ்மான் உலகைக் கண்விழித்து பார்த்த நாள் இன்று.
ரகுமான் பாட்டுலாம் கேக்க கேக்கத்தான் புடிக்கும் இப்படி பேசுபவர்கள் இன்னும் பைரவா பாடல்கள் கேட்கவில்லை என்று நினைக்குறேன்.
தள்ளிப் போகாதே...
எல்லோரோட மனதில் என்றும் தள்ளிப் போகாமலே இருக்கும் இசைக் கடவுளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தமிழரின் பெருமை, இசையின் மாயாஜாலக்காரன், ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நலமுடன் வாழ்ந்து மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்து.
புது வெள்ளை மழை என்ற பாடலில் பொழிவது காஷ்மீரின் பனி, வைரமுத்துவின் கவி மட்டுமில்லை ரஹ்மானின் இசையும்தான்.
பாடலாசிரியர் யாராக இருந்தாலும் அவர்கள் எழுதுற வரிகளுக்கு சாகா வரம் கொடுப்பவர்- ஏ.ஆர்.ரஹ்மான்.
இரு கைகளிலும் ஆஸ்கர் ஏந்தி "எல்லா புகழும் இறைவனுக்கே" நீ சொன்ன கணம் எங்கள் இதயங்களில் குடிகொண்டாய் இசைக்கடவுளாய்! #HBDARR
இளையராஜா சச்சின் என்றால்
ஏ.ஆர்.ரஹ்மான் தோனி..
Nazar Kran
தமிழர்களை ஆஸ்கர் அரங்கில் பெருமையடைய செய்தவர், மாடர்ன் இசையின் முடிசூடா மன்னன்.
வரிகளுக்கு வர்ணம் பூசி, பிஞ்சில், எங்கள் நெஞ்சில் தென்றல் வீசச்செய்த இசைப் பெருங்கடல். உன் இசை அலைகள் ஓயாது எங்களை தொடட்டும் #HBDARR
*
இசைப்புயல் புவியில் மையம் கொண்ட நாள்!
>Karthik PSK Raja @karthik018
அவமானங்களை சேகரித்து வை!
வெற்றி உன்னை தேடி வரும்!! - ரஹ்மான். #lifeQuote
Dhamal Mahesh
தமிழ்த் திருநாட்டின் முகவரி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நறுமுகையே பாட்டை நீங்க கூட அவ்ளோ தடவை கேட்டிருக்க மாட்டீங்க ரஹ்மான் சார்.
இசையில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இவரின் இசையைக் கேட்டு மெய்சிலிர்த்து போவார்கள். @arrahman #HBDARR50
இசை என்னும் புயலால் அனைவரையும் சாய்த்த ஆஸ்கர் மன்னன் #HBDARR50
ரஹ்மான் பாட்டில பிடிச்ச பாட்டொன்றை ஷேர் செய்யலாம்னு பார்த்தா எல்லாப் பாட்டும் பிடிச்ச பாட்டா இருக்கே. #HbdARR
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago