தி இந்து தமிழ் 4-ம் வயதில் நெகிழவைத்த வாசக நெஞ்சங்கள்!

By செய்திப்பிரிவு

நீங்கள் உச்சி முகர்ந்து, சீராட்டி வளர்த்துவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று நான்காம் வயதில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டிய >சிறப்புப் பகிர்வில் அன்பு வாசக நெஞ்சங்களின் நெகிழவைத்த வாழ்த்துகள், கருத்துகள் தரும் உற்சாகத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

புதுச்சேரியில் இருந்து வந்திருக்கும் ஒரு வாசகரின் வாழ்த்து எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சியை, மன நிறைவை அளித்திருக்கிறது. 4-ம் வகுப்பு படிக்கும் வாசகர் யஷ்வந்திகாவின் வாழ்த்துதான் அது. இந்து பத்திரிகையை தன் சகோதரியாக நினைத்து வாழ்த்திய வாசக உள்ளத்தின் அன்பு சொல்லித் தீராது. சொல்லில் தீராது.

இதோ அந்த வாழ்த்துக் கடிதம்:

ஐயப்பன் எனும் வாசகர் 'மும்பை தமிழ் பதிப்பு எப்போது?' என அக்கறையுடன் கேட்டிருக்கிறார். அதற்கு சின்னையன் எனும் வாசகர், 'உங்கள் பேராசைக்கு நன்றி' என்று செல்லமாய் நய்யாண்டி செய்திருக்கிறார். வாசகர்களின் பேராதரவில் மும்பை தமிழ் பதிப்பும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. வாசகர்களின் ஆர்வத்துக்கும், அக்கறைக்கும் நன்றிகள்.

'தி இந்து' நாளிதழை ஐபேட், ஐஃபோனிலும் படிக்கும் வண்ணம் ஒரு செயலியை வெளியிடுமாறு பொன்னையா எனும் வாசகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளில் 'தி இந்து' தமிழ் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என்பதையும் பெருமகிழ்வுடன் கூற விழைகிறோம்.

வாசகர்கள் பகிர்ந்த கருத்துகளின் தொகுப்பு

வாழ்த்துகள், அனைவருக்குமான பத்திரிகை. அனைத்து பக்கங்களும் அருமை. தேசத்தின் மீதான அக்கறையாகட்டும் மக்களின் அக்கறையாகட்டும் எதிலும் குறை இல்லை. தலையங்கம் பொறுப்பை சுட்டிக்காட்டும் கண்ணாடி. நடுப்பக்கம் நடுநிலையை சொல்லும் பக்கம். மீண்டும் வாழ்த்துகள்.

- ராதாகிருஷ்ணன்

வாழ்த்துகள். மேலும் பல முன்னேற்றங்களை, வழங்கப்படும் செய்திகளில் ஆழமான பரிமாணங்களை, நடுநிலை தவறாத விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். ஆனால் சமீப காலமாக திரை பட செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. முதல் பக்கத்தில் பாதிக்கு மேல் திரைப்பட செய்திகளே. ஆசிரியர் குழு சற்று கவனிக்க வேண்டும்.

- கண்ணன்

தமிழ் பத்திரிகை உலகில் புதிய மாற்றங்கள் நிறைய செய்து பத்திரிகையை மக்கள் மிகவும் விரும்பும் வண்ணம் செய்த தி இந்து தமிழ் நாளிதழ் மேலும் வளர்க என்று பிரார்த்திக்கும் ஒரு வாசகன்

- மாரிமுத்து

'இந்து'விடம் பிடித்தது, நடுநிலையாக இருக்க முயற்சிப்பது. மேலும் பரபரப்பிற்காக மற்ற பத்திரிகைகள் போல,மனைவியை பிரியும் நடிகர், இந்த நடிகையின் நாய்குட்டியின் பெயர் தெரியுமா போன்ற தேவையற்ற தலைப்புகளில், தேவையற்ற கட்டுரைகள் வராமல் இருப்பது, முறை தவறிய உறவுகள், கொடூர கொலைகள் பற்றிய செய்திகளை விவரித்து எழுதாமல் இருப்பது, விற்பனைக்காக மக்களை உஷார் படுத்துகிறோம் என்று கற்பனை கதைகளை அள்ளிவிடாமல் இருப்பது போன்றவை.

பிடிக்காதது..சும்மாவாவது சிலரை குற்றம் சொன்னால்தான் நடுநிலை என்று நினைத்து ஒருதலையாக செய்திகள் போடுவது அல்லது சில செய்திகளை மறைப்பது. மற்றபடி இந்துவில் எல்லா அங்கங்களுமே பயனுள்ளவையாகத்தான் இருக்கின்றன. எந்த அழுத்தத்திலும் நடுநிலை பேணிட வாழ்த்துகள்.

- ரீஃபா

கிராமப்புற மக்கள் - தினசரி சந்திக்கும் பிரச்சினைகளை அதிகாரவர்க்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வது இந்து-வின் பக்க பலம். பல மாற்றங்கள் வரவேண்டும். தொடரட்டும் தங்கள் நல்ல பணி.

- சண்முகம்

ஒரு வேண்டுகோள். நீங்கள் சந்திக்கும் கஷ்டப்படும் மனிதர்களின் கஷ்டங்களை எழுதும்போதும், ஏழைகளின் படிப்பு செலவு போன்ற செய்திகளை கவர் செய்யும்போதும் அவர்களின் பேங்க் அக்கவுன்ட் நம்பரை பதிவிடுங்கள். 7 கோடி தமிழன் நினைத்தால் எத்தனையோ கஷ்டப்படும் நபர்களை தி ஹிந்து மூலம் க்ரவுட் ஃபண்டிங் முறையில் கைதூக்கி விடலாம்.

- ஜெய்குமார்

தமிழால் எங்களுடன் இணைந்த நீங்கள், தமிழ் போல் என்றென்றும் தமிழ் மக்களுடன் என்னென்றும் இணைந்திருக்க வேண்டும். வாழ்த்துகள்.

- சுரேஷ்

மிக்க மகிழ்ச்சி. நோயற்றவாழ்வுடனும் குறைவற்ற செல்வத்துடனும் வாழ வாழ்த்துக்கள். (நோய்- ஒருதலை பட்சமாக விமர்சிப்பது, குறைவற்ற செல்வம் - நிச்சயம் வாசகர்களாகிய நாங்கள்தான்!)

- ஜவஹர்

'தமிழ் இந்து' குழுமத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தோழர்களே.. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காதிருக்கும் அல்லவா.. அத்தகைய நம்பிக்கையோடும் நல்லுணர்வோடும் நல்விதைகளையே விதைத்து வைப்போம்.

- பாண்டி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

10 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்