நெட்டிசன் நோட்ஸ்: இமைக்கா நொடிகள் - வேற லெவல்

By செய்திப்பிரிவு

அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடிப்பில்  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இமைக்கா நொடிகள் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

மித்ரன்

‏இமைக்கா நொடிகள்

படம் செம....நயன்தாரா

ஆக்டிச் ஆசம்

அட்டகத்தி 

‏தாம்பரத்தில் இருந்து திருப்பதி வரை நடந்தே போன மாதிரி இருக்கு.. இமைக்கா நொடிகள்

sivaraman

‏இன்னும் இறுக்கமான திரைக்கதையும், இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையையும் சேர்த்திருக்கலாம் என்றாலும், #இமைக்காநொடிகள் ஏமாற்றவில்லை.

அனுராக் காஷ்யப் எனும் நடிப்பு ராட்சனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மொத்த நடிப்புக்குழுவும் சற்றே தடுமாறத்தான் செய்கிறது.

Paneerkumar

‏இமைக்கா நொடிகள் படம் செம்ம..அனைத்து நடிகர்களும் அற்புதமான நடிப்பை வெளிக் காட்டியுள்ளனர்..

படத்திற்கு இசை மற்றும் பின்னனியிசை மிகுந்த பலம்..

#ஹிப்பாப்தமிழா அண்ணா வாழத்துகள்..

பாரி ஆலன்

‏இமைக்கா நொடிகள் - சுமார் த்ரில்லர். கொஞ்சம் ஈஸியாவே predict பண்ண முடியுது.

RamKumar

‏முருகதாஸ் அசிஸ்டண்ட் குரு நேம் காப்பாத்திட்டார்

படத்துக்கு மிகப்பெரிய ++ ஸ்கீரின் பிளே தான் நம்மள எங்கையுமே நகர விடல அவளோ வேகமா போய்ட்டே இருக்கு

இமைக்கா நொடிகள் டைட்டில் எதுக்கு வச்சாங்கன்னு நமக்கு தெரிய வரும் போது லைட்டா கண்ணு கலங்கும்.

மக்கள் செல்வன்

3 மணி நேரம் படம்னாலும் அந்த 20 நிமிடம் படத்தில வொர்த்

HBD மகா BABY

இமைக்கா நொடிகள் தரமான படம்...எல்லோரோட எஃபெக்ட்டும் மாஸ்ஸ்

DON

‏சாதாரண Revenge storyதானேடா அதுக்கு ஏன்டா சீரீயல் கில்லர்னு யூடேர்ன்லாம் போட்டு டேபிளலாம் உடைச்சீங்க

SAN

‏யாரா அது வில்லன் கேரக்டர்

சும்மா கிழி கிழி னு கிழிச்சுட்டாப்பல என்னா ஆக்டிங் டா

படம் முதல் பாதி தான் கொஞ்சம் மெதுவா போது

இரண்டாம் பாதி த்தா வேற லெவல் டா

Kasi Viswanathan

‏ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு படத்தைப் பத்திப் பதிவு பண்றேன்.

இமைக்கா நொடிகள் எனக்கு புடிச்சிருக்கு!

முடிஞ்சா போய் பாருங்க .

பா மரக் கனி  

"அனுராக் காஷ்யப்"

தமிழ் சினிமா நாயகர்களின் நடிப்பினை ஏளனம் செய்யும் வில்லத்தனம்  

"இமைக்கா நொடிகள்"

akthi

‏அனுராக் காஷ்யப் செம

HBD U1

‏நல்லாருக்கு... நயன்தாரா..

அனுராக் நடிப்பு ,வாய்ஸ் செம்ம. பிஜிஎம்..

 

RISWAN   RKB

‏#அதர்வா

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல நடிகனைப் பாக்குறேன்

அவரோட கண்கள் கூட நடிச்சிருக்கு. எனக்கு இந்தப் படத்துலேயே அதர்வா நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது.

இடைவேளைக்கு பிறகு அதர்வாவோட நடிப்பு வேற லெவல்.

நல்ல கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கிறாரு.

அந்த நாற்காலியோட ரெண்டாவது கால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

31 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

29 mins ago

சினிமா

47 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

41 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

55 mins ago

வலைஞர் பக்கம்

59 mins ago

மேலும்