நடிகர் கமல் இன்று (புதன்கிழமை) தனது 64-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர் தங்கள் வாழ்த்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
balu
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் ரசனைமிகுந்த ரகசியக் கவிஞன்...
கமல் ரசிகன்
எங்கள் உள்ளங்களை என்றென்றும் ஆளும் எங்கள் ஆண்டவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Nandhu Rao
64 கலைகளை
பெயர் மற்றி
கமல் கலைகள்
என தனிப்படுத்தி
64 வயதைக் காணும்
கமல்ஹாசன்
என்னும் இளைஞருக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்...
#சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்...
Leo
நடிகர்கள் தனக்கு சினிமால எந்த மாதிரி கதைகள் பொருந்தும்னு தேர்ந்தெடுத்து வரிசையா ஹிட் கொடுப்பாங்க..
கமல் சாருக்கு இந்தக் கதை பொருந்தும்னு நினைச்சாலும் அதுல நடிச்சு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கறது தான் அவர் ஸ்டைலே.
ishal Santhosh
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசான் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !! :-) @ikamalhaasan
டீ
குழந்தை நட்சத்திரமாய் இருந்த கமல் 73 ஆம் ஆண்டு ”சொல்லத்தான் நினைக்கிறேன்” மூலம் இளவயது நடிகராகி 43 ஆண்டுகள்
Jayaprakash
சந்தேகமில்லை தமிழ் சினிமாவின் "பொக்கிஷம் தான்" கமல்.
அந்த பொக்கிஷம் அரசியல் சுரங்கத்தில் தங்கம் தேடப் புறப்பட்டது தான் பரிதாபம்..
பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் சார்....!
Dhavamani Kamal
என்னை வழிநடத்தும் ஆசான் கமல்ஹாசனே...
உன்னால்தான் உடல்தானம் செய்தேன்..
அரசியல் - என் கடமை
என உணர்த்திய உலகநாயகனே..
எம் பிறந்தநாள் வாழ்த்துகள்.
Capt .Johnson C
“நம்மவர்” நமக்காக பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் .
Happy Birthday kamal sir..
k.dhinesh kumar
எங்கள் தலைவர் ஆசான் கமல் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
அவதார்
வயது ஆக ஆக முதுமை கூடாமல் அனுபவம் மட்டுமே கூடும் இவருக்கு..
என்றும் இளமையான உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் @ikamalhaasan
குட்டி பையன்
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு... உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு....
#உலக_நாயகனே.....
sudharsana subramani
என்றும் வற்றாத சினிமாவின் 'மகாநதி' நமது கலைஞானி...
Madhan Mithran
உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் சினிமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அட போடா!!
நடிப்பென்னும் கலை உலகின் #கடாரம்_கொண்டான் கமலு( @ikamalhaasan )க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
Poorna Pdmk
சினிமாவின் சிகரமே பிறந்த நாள் வாழ்த்துகள்
Chandra Shekhar
மாபெரும் சபையினில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்;
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்... பிறந்த நாள் வாழ்த்துகள்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
1 hour ago