நெட்டிசன் நோட்ஸ்: வடசென்னை - ஒரு முழுமையான வெற்றிமாறன் படம் !

By செய்திப்பிரிவு

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா, வெற்றிமாறன், ஆண்டிரியா ஆகியோர் நடிப்பில் வடசென்னை திரைப்படம் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்......

HBD Yesudoss

‏வடசென்னை மூவி படம் நான் வியந்த படங்களில் ஒன்று.

Mixturism

படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டேன் ஆனா இன்னு அந்த படத்தை விட்டு வெளிய வர முடில

Aravindh Balaji

‏ பழி...ரத்தம்...நன்றி...காதல்...

ஒரு முழுமையான #வெற்றிமாறன் படம் !

#ராஜன் ஆகிய அமீர் மற்றும் #அன்பு ஆகிய தனுஷ் இருவரின் நடிப்பு சொல்லில் அடங்காதவை!

ஒரு அழுத்தமான வாழ்வியல் சொல்லும் களம் வடசென்னை!

sowmi_ram

‏வாழ்வியல் படங்களின் வரிசையில் வடசென்னை - வெறியாட்டம்

Senthil Subbaiah

‏காலா'வானாலும் மேற்குத் தொடர்ச்சி மலை'யானாலும பரியேரும் பெருமாளா'னாலம் ஏன் வடசென்னையானாலும் கூட

நிலம் தான் இங்கு அரசியல்.

Shankar

‏திரும்பி பார்த்தா தனுஷுக்கு கெத்தா சொல்லிக்குற மாதிரி படங்களை திரும்ப திரும்ப வெற்றிமாறன் கொடுத்துட்டே இருக்காப்ல !!

பாலா

‏இப்போதைய தமிழ் சினிமா ஹீரோக்களில் யாருக்குமே இல்லாத ஒரு + தனுஷ்க்கு இருக்கு,பிளாஸ்பேக் சீன்கள்ல க்ளீன்ஷேவ் பண்ணிட்டா யங் லுக் , தாடி ,மீசை வெச்சா ரவுடி கெட்டப்

Arivu

‏தரமான சம்பவம்....       

 

அமிர் - ஆணிவேர்

ஆண்ட்ரியா - அழுத்தம்

கிஷோர் - ஆடுகளம்

கனி - அடுத்த கட்டம்

டேனியல், பவன் - பலம்

ச.நாராயணன் - தெறி

வேல்ராஜ் - தெளிவு

ஜக்கி - வாழ்வியல்

தனுஷ் = வெற்றி

JSK.GOPI

‏வடசென்னை

துரோகம் எப்போதும் இறுதியில் மரணத்தை தான் பரிசாக தரும் என்று சொல்லும் ப(பா)டம்...

வடசென்னை தினா

ரியல் லைப்ல நடக்குற அளவு எதார்த்தம். படம் முழுக்க எதார்த்தம் நன்றாக உள்ளது. அன்பு உடன் டிராவல் ஆகும் மனிதனாக நாம் மாறுவதே படத்தின் வெற்றி.

அவதார்

‏பொல்லாதவன்,ஆடுகளம் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்த தனுஸ்-வெற்றிமாறனின் ஹாட்ரிக் வெற்றி

Srinivasan Aravind

‏சில படத்த பாக்கும் போது தான் மனசு நூறு சதவிகிதம் திருப்தி அடையும். இந்த படம் முடியாம இருந்தா நல்லாருக்குமேனு தோணும். இந்த படத்த, இந்த கதைய, இந்த கதாப்பாத்திரங்கள பாத்துட்டே இருக்கலாமேனு தோணும். சே! ஏண்டா, இந்த படம் முடிஞ்சிச்சுனு தோணும். அப்படிப்பட்ட ஒண்ணு தான் வடசென்னை.  

ezhil e. k.

தரமான கேங்ஸ்டர் படம். வடசென்னையின் வாழ்க்கையை இதைவிட மிக அழகாக பதிவு செய்ய முடியாது.

அரசியல்வாதிகள் தன் சுயநலத்திற்காக புத்தகம் பிடிக்க வேண்டிய கையில் கத்தியை கொடுத்து எப்படி கெடுத்துவைத்திருக்காள் என்பதை அழகாக பதிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்