நெட்டிசன் நோட்ஸ்: நா.முத்துக்குமார் பிறந்த நாள் - இவன் காலத்தை ஹைக்கூவாக எழுதியது யார்...

By செய்திப்பிரிவு

தமிழ் திரைப்பாடல்களின் குரலாக ஒலித்துவந்த கவிஞரும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின்  43-வது பிறந்த தினம் இன்று. இதனைத் தொடர்ந்து நா. முத்துக்குமாரின் ரசிகர்களும், நெட்டிசன்களும் அவரது பாடல்கள் குறித்தும் கவிதைகள் குறித்து பதிவிட்டு வருகின்றன. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்

 

Nethes Yuvan

‏பேரன்பின் ஆதி ஊற்று

ஸ்வேதா  

‏உன்னிடம் பார்க்கிறேன்... நான் பார்க்கிறேன்...

என் தாய்முகம் அன்பே! 

உன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்...

என்னாகுமோ இங்கே! 

முதன் முதலாய் மயங்குகிறேன்! 

கண்ணாடி போல தோன்றினாய்

என் முன்பு என்னை காட்டினாய் 

கனா எங்கும் வினா!!!❣️

-நா.முத்துக்குமார்

Tamil♡Vijay

‏உங்கள் உயிர் கொடுக்கும் எழுத்துக்கள் என்றும் மறையா வண்ணம்..

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

#HBDNaMuthukumar

тнє αитαgσиιѕт  

‏எனக்குப் பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே...

உதிர்ந்தது இந்த பூவா....

Madhu sudhanan

‏யாருக்கும் தெரியாமல் உனக்கு நீயே ஒரு நினைவஞ்சலி கவிதை எழுதி வைத்திருப்பாய் தானே ?

D10     

‏முதல்முறை வாழப்பிடிக்குதே

முதல்முறை வெளிச்சம் பிறக்குதே

முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே

முதல்முறை கதவு திறக்குதே

முதல்முறை காற்று வருகுதே

முதல்முறை கனவு பலிக்குதே அன்பே

PS

எங்கோ எங்கோ ஒர் உலகம் உனக்காக காத்து கிடக்கும், நிகழ்காலம் நதியை போல மெல்ல நகர்ந்த்து போகுதே, நதி காயலாம் நினைவில் உள்ள காட்ச்சி காயுமா..

#HBDNaMuthukumar

Shrnya_Pandi

‏இவன் காலத்தை ஹைக்கூவாக  எழுதியது யார்..

Lakshmivva

‏நான் ஏன் நல்லவனில்லை

என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று

நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு

அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று

உங்களிடம் அதைப்

படிக்கக் கொடுக்கிறேன்

Ram Krisz

‏தீயை பிடித்து தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, மந்திரம் இது தான். கற்றுப் பார்.

Parasaran

‏போர்களத்தில் பிறந்துவிட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும் நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்       

#HBDNaMuthukumar

கடைக்குட்டிசிங்கம் நாளை முதல் 

‏"வரிகள் செமையா இருக்கே யார் எழுதுனா ? "என்ற வாக்கியம் தமிழ் சமீபகாலமாய்  சினிமாவில் ஒலிக்காததற்கு காரணம் இவரின் இழப்பு ! உன் வரிகளுக்கு சமமாய் உனக்கு திருப்பி தர எதுவும் இல்லை கண்ணீரை தவிர ! ஏன் விட்டு சென்றாய் எங்களை ! முடிந்தால் திரும்பி வா ! #HBDNaMuthukumar !

திருமறைக்காடான்  

‏பிம்பங்களற்ற தனிமையில்

ஒன்றிலொன்று முகம் பார்த்தன

சலூன் கண்ணடிகள்..

Muthu Kumar

‏கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்

காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்

அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்

தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்

- நா.முத்துக்குமார்

 

 

Balu

‏பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே  

Thiru

‏உன் வரிகளுக்கு சமமாய் உனக்கு திருப்பி தர எதுவும் இல்லை இங்கு

வி.தமிழ் சுகி

‏அத்தனை நினைவூட்டலும்

குறிப்பிட்ட நாட்களுக்குள் அடங்கலாம்

உன் எழுத்து தவிர

கோ. கார்த்திக் பாரதி

‏குழந்தைக்கு தந்தை தாயாகி தாலாட்டு பாடியதும். தந்தைக்கு மகன் வலியுணர்ந்து பாடியதும்.

உம்மைத்தவிர தவிர யாருக்கும் சாத்தியமில்லை அண்ணா!

தீர்க்கதரிசி

‏பிரமிக்கதக்க வகையில் பல கவிதைகளை படைத்து,

யாரும் எட்ட முடியாத உயரத்தை மிக இளம் வயதில் எட்டியதால் தான் என்னவோ,

மிக இளம் வயதில் இம் மண்ணை விட்டு விண்ணில் உன் கவிதைகளை எழுத சென்றுவிட்டாயோ?

என்றென்றும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருப்பாய் உன் கவிதை வரிகளால்!

Hasan Kalifa

அப்பாவின் சாயலில் உள்ள கடைக்காரரிடம் சிகரெட் வாங்கும் போதெல்லாம் என் விரல்கள் நடுங்குகின்றன.-நா.முத்துக்குமார். #HBDNaMuthukumar

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்